திருநெல்வேலி :
கோயிலில் சாமி கும்பிட உரிமை கோரி நெல்லை ஆர்.டி.ஓ.,அலுவலகத்தை தலித் மக்கள் முற்றுகையிட்டனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பிள்ளையார்குளம். அங்குள்ள வடபத்திரகாளியம்மன் கோயில் பல்வேறு சமூகத்தினரும் வழிபட்டுவந்தனர். அண்மையில் கோயிலில் வழிபடுவது தொடர்பாக இருசமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் தலித் சமூகத்தினர் அங்கு சாமிகும்பிட அனுமதிக்க மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே இன்னொரு சமூகத்தினர் தங்களுக்குத்தான் உரிமை உள்ளதாக கூறி வரும் செவ்வாய்க்கிழமை அந்த கோயிலில் கொடை விழா நடத்த உள்ளனர். எனவே வீரணாபுரத்தை சேர்ந்த தலித் மக்கள் சுமார் 150பேர் நேற்று நெல்லை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டு அமர்ந்தனர். 26ம் தேதி கொடை விழாவில் தாங்களும் பங்கேற்க அனுமதிக்க கோரினர். அவர்களிடம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் சங்கரன்கோவிலில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மக்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். வரும் 26ல் அங்கு கோயில் திருவிழாவையொட்டி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Thanks :Dinamalar
No comments:
Post a Comment