





சி.ஐ.ஏ.வின் சர்ச்சைக்குரிய விசாரணை முறைகளைத் தடுக்கும் சட்டம் அமலுக்கு வருவதை அதிபர் புஷ் தடுத்துள்ளார்

வாட்டர்போர்டிங் விசாரணை உத்தியை எதிர்த்து நடந்த ஒரு போராட்டம் அமெரிக்காவின் மத்திய உளவுத் துறையான சி.ஐ.ஏ. பயன்படுத்திவரும் கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய விசாரணை முறைகளைத் தடைசெய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை தனது வெட்டு வாக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுதிவிட்டதை அதிபர் புஷ் உறுதிசெய்துள்ளார்.
சி.ஐ.ஏ.வின் இந்த விசாரணை முறைகளால்தான் அமெரிக்கா மீது மறுபடியும் மறுபடியும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடப்பது தடுக்கப்படிருக்கிறது, இந்த சட்டம் தெரிவிக்கும் மாற்றங்கள் அமலுக்கு வந்தால் அது அமெரிக்க மக்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கலாம் என்று அதிபர் புஷ் கூறியுள்ளார்.

விசாரிக்கப்படும் நபருக்குக்கு தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறுவது போன்ற உணர்வைத் தரும் வாட்டர்போர்டிங் என்ற விசாரணை உத்திக்கும் இந்த சட்ட மசோதா தடை விதித்திருக்கக் கூடும். இந்த விசாரணை உத்தியை சித்ரவதை என்று கூறி மனித உரிமை குழுக்கள் கண்டித்திருந்தனர்.
செய்தி தொகுப்பு : BBC தமிழ் (Thanks)
No comments:
Post a Comment