கவுகாத்தி, மார்ச்.9-
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் அலங்காரப் பொருட்கள் விற்கும் கடை வீதியில் ஒரு லாரியின் கீழ் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு நேற்று பகல் 1 1/2 மணிக்கு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் ஒரு தொழிலாளி, ஒரு டீக்கடைக்காரர், பாதையில் நடந்து சென்ற 2 பேர் ஆக 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்னர் தங்களது வீடுகளுக்கு திரும்பினார்கள்.
இந்த குண்டு வெடிப்பு நடந்த 30 நிமிடங்களில் தின்சுக்கியா நகரத்தில் ஒரு குண்டு வெடித்தது. இதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
2 குண்டு வெடிப்புகளையும் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தாங்கினி என்ற இடத்தில் வெடிக்காத 2 1/2 கிலோ எடையுள்ள ஒரு குண்டை போலீசார் கைப்பற்றி செயல் இழக்கச் செய்தனர்.
Thanks : Dailythanthi
தமிழ் நாட்டிலும் சரி இந்தியாவின் பிற பகுதிகளிலும் சரி நடைபெறும் குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் பல காவி கொலைவெறி இயக்கங்கள் இருப்பது சமீப காலமாக எல்லோரும் அறிந்த ஒன்று தான்.உதாரணமாக சமீபத்தில் தமிழ்நாட்டில் தென்காசி என்ற இடத்தில் R.S.S அலுவலகத்துக்கு அவர்களே வெடி குண்டு வைத்து வெடிக்க செய்து அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை கலவர சுடுகாடாய் ஆக்க போட்ட திட்டம் அம்பலமானதும் இன்னும் நான்டிடில் குண்டு தயாரிக்கும் போது பிடிபட்டதும் கூடவே பழியை அப்பாவிகளும் தியகிகளுமான ஒரு சிறுபான்மை சமுதாயத்தின் மீது போட வேண்டி போலியான தாடிகளும் தொப்பிகளும் மறைத்து வைத்திருந்ததும் இவர்களின் கொலை வெறியையும் முளுவதுமாக மிருகங்களாக ஆகிவிட்ட தன்மையயுமே காட்டுகிறது.இனியும் இந்தியர்கள் உறங்கி விடாமல் இதுபோன்ற இழி பிறவிகளின் சூழ்ச்சியை எதிர்த்துப் போராட வேண்டும்.
அன்புடன்
இறை அடிமை
No comments:
Post a Comment