Saturday, March 8, 2008

"கொசுவே இன்று வேண்டாம், நாளை வா' கொசுவுக்கு கோவில் (கொசுவாம்பிகை ?)



கொசுவுக்கு கோவில் எழுப்பிய அதிசய டாக்டர்
ஐதராபாத்:கொசுக்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கிராம மக்களிடம் செய்து வந்த பிரசாரம், கண்காட்சி, கருத்தரங்கு எதுவுமே கைகொடுக்கவில்லை. இப்படிப்பட்ட கொசுவுக்கு கோவில் தான் கட்ட வேண்டும் என்று ஒரு டாக்டர் முடிவு செய்தார். கொசுவுக்கு அவர் கட்டிய கோவில், இப் போது நல்ல பலன் தருகிறது.



ஆந்திர மாநிலத்தில் உள்ள மொக்ஷாகுந்தம் என்ற கிராமத்தில் டாக்டராக பணியாற்றுகிறார் சதீஷ் குமார். கிராமத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர், குப்பைகளால் கொசு அதிகளவில் உற்பத்தியாகி, கொசுக்கடியால் பல் வேறு நோய்களுடன் சிகிச் சைக்கு வந்தவர்களிடம், கொசுக்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கிப் பார்த் தார். கண்காட்சி நடத்தி, கொசுக்களை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து விளக்கினார். கருத்தரங்கு நடத்தினார்; கலந்து கொள்ளத்தான் ஆளில்லை.வெறுத்துப் போன டாக்டர் சதீஷ், ஆன்மிக வழியில் மக்களை திருத்த முடிவு செய்தார். ஒரு வேப்பமரத்துக்கு கீழே, திண்ணையுடன் கூடிய இரண்டரை அடி உயர, "கோவில்' கட்டினார். "கோவிலில்' பெரியளவில் கொசுவின் படத்தை வரைந்து வைத்தார். இந்த, "கோவில்' நல்ல பலனை கொடுத்தது. "இந்த கோவில் வழிபாடு நடத்துவதற்கு அல்ல; கொசுவால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிந்து கொள்வதற்குத் தான்' என்று கிராம மக்களிடம் விளக்கினார்.



கொசுவின் படத்துக்கு கீழே, "கொசுவே இன்று வேண்டாம், நாளை வா' என்று வாசகம் எழுதி வைத்துள்ளார். பக்கவாட்டில் ஒரு பெரிய பலகையில், கொசுவை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்; செய்யக்கூடாது என்பதை பெரிய எழுத்துக்களில் எழுதி வைத்துள்ளார்.மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்கு முன், இந்த "கோவிலுக்கு' செல்ல டாக்டர் சதீஷ் குமார் தவறுவதில்லை. அங்குள்ள திண்ணையில் சற்று நேரம் அமர்ந்திருப்பார். அப்போது அங்கு வரும் மக்களிடம், கொசுக்களின் தீமை குறித்தும், அவற்றை எப்படி ஒழிப்பது என்பது குறித்தும் விளக்குவார். பின்னர் வீடு திரும்புவார். இது அன்றாட வழக்கமாகிவிட்டது. மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டுள் ளது. பெற்றோருக்கு, நேசிப்பவர்களுக்கு, வளர்ப்பு பிராணிகளுக்கு, ஏன், நடிகைக்குக் கூட கோவில் கட்டிய கதையை கேள்விப்பட்டு இருக்கலாம். கொசுவுக்கு கோவில் கட்டப்பட்டு இருப்பதை இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. கொசுவுக்கு எழுப்பப் பட்ட ஒரே கோவில், இதுவாகத்தான் இருக்கும்.



நன்றி : தினமலர்


அன்பிற்குரிய சகோதர சமுதாயமே இன்று இது உங்களுக்கு ஒரு நல்ல முயற்சியாய் தெரியலாம். ஆனால் இனி வரும் தலைமுறை கடவுள் என்றால் இதுவும் கடவுளின் உருவம் தான் இப்படியும் கடவும் பாவங்களை அழிக்க வருவார் என்ற ஒரு கீழ்த்தரமான ஒரு நம்பிக்கையை உருவாக்கிவிடும்.இன்னும் இது போன்ற ஒரு சிலரின் முயற்சி தான் அன்றும் இருந்தது.
இதே போன்று தான் முன்பு ஒரு முறை சினிமா கவர்ச்சி நடிகை குஷ்பு விற்கு கோவில் கட்டியதையும் அதில் குஷ்பாம்பிகை என்ற ஒரு சிலை வைத்தும் இன்னும் அந்த கோவிலில் பூஜை களும் புனஷ் காரங்களும் மக்களால் நடத்தப் படுவதும் குறிப்பிடலாம்.இந்த குஷ்பு தமிழ் நாட்டுப் பெண்களையும் இந்தியக் கலாச்சறதும் குழி தோண்டி புதைக்கும் விதமாக பேசியதாக பல வழக்குகள் இவர்மேல் உள்ளதும் குறிப்பிடத் தக்கது.இப்போது சொல்லுங்கள் இந்த குஷ்பு வழி பட தகுதி உள்ளவர் தான ? இலை எனபது அப்பட்ட மான உண்மை.இது ஒரு சமகால நிகழ்வு.எனவே தான் இத்தனை இங்கே குறிப்பிடுகிறேன்.
இன்று நீங்கள் கடவுள் என்ற பெயரால் சில படைப்புகளை வணங்க இதுவே முதற்காரணம். எல்லா விசயத்திலும் உங்கள் மூததயர்களை பின்பற்றும் நீங்கள் அத்தகைய ஒரு அன்பின் காரணமாக உணமயான் படைப் பாளனை பற்றி ஒரு ஆழ்ந்த அறிவு இல்லாமலே இருக்கிறீர்கள்.ஒரு படைப்பாளனுக்கு உள்ள தகுதிகள் என்ன என்பதனை நீங்கள் சற்று சிந்தித்தாலே போதும் இது போன்றவர்கள் சாக்கடையில் இருக்கும் ஒரு அற்ப ஜந்துவிர்க்கு கோயில் என்று உங்களை ஏமாற்ற எத்தனிக்க மாட்டார்கள்.சிந்திபீர். இனியாவது

படைப்புகளை வணங்கு வதை விட்டுவிட்டு உங்களைப் படைத்தவனை வணங்குங்கள்.


No comments: