..புதைப்பதா எரிப்பதா மோதலில் கோர்ட் புது தீர்ப்பு!*மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒப்படைக்க உத்தரவு
கோல்கட்டா: "தாயின் உடலை தகனம் செய்ய வேண்டும்' என்று,இந்து மத வாரிசுகள் போர்க்கொடி உயர்த்தினர்; "அடக்கம் செய்ய வேண்டும்' என்று, முஸ்லிம் வாரிசுகள் வலியுறுத்தின. இரு தரப்பினரிடமும் தாயின் உடலை ஒப்படைக்காமல், கோர்ட் அதிரடி(?) தீர்ப்பு அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் பரி ராய்; வயது 65. பிரசாத் பக்ஷி என்பவரை 1961 ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். பக்ஷியின் மரணத்துக்கு பின், சகாரியா மாலிக் என்ற முஸ்லிமை பரி ராய் திருமணம் செய்தார். இவர்களுக்கு பரீதா என்ற பெண் இருக்கிறாள்.
கடந்த நவம்பர் மாதம் பரி ராய் மரணம் அடைந்தார். "எங்களிடம் தான் உடலை ஒப்படைக்க வேண்டும்' என்று சகாரியா கோரினார். ஆனால், பரி ராய்க்கு முதல் கணவர் மூலம் பிறந்த இரு பெண்களும்,"எங்கள் தாய் உடலை, சகாரியாவிடம் ஒப்படைக்கக்கூடாது' என்று தெரிவித்தனர். இதனால், மருத்துவமனை அதிகாரிகள் குழம்பினர். " கோர்ட் உத்தரவு வாங்கி வாருங்கள்; பரி ராய் உடலை ஒப்படைக்கிறோம்' என்று சகாரியாவிடம் கூறினர். கோல்கட்டா ஐகோர்ட்டில், இரு தரப்பினரும் வழக்கு போட்டனர். "எங்கள் தாய் , இந்துவாக பிறந்தவர்; அவர் உடலை தகனம் செய்ய எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று இந்து மதத்தை சேர்ந்த மகள்கள் கூறினர்.
"பரி ராய், என்னை திருமணம் செய்து கொண்ட பின் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவராகி விட்டார். அவர் உடலை அடக்கம் செய்ய, என்னிடம் ஒப்டைக்க வேண்டும்' என்று சகாரியா கோரினார். "இருவரில் எவரிடமும் உடலை ஒப்படைக்க முடியாது; மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில் மருத்துவக்கல்லுõரியிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் அப்பீல் செய்யப்பட்டது. அங்கும் இரு தரப்பினரும், தங்கள் கருத்தில் பிடிவாதமாக இருந்தனர்.
தலைமை நீதிபதி நிஜ்ஜார் மற்றும் நீதிபதி பட்டாச்சார்யா, இரு தரப்பினரின் அப்பீலையும் நிராகரித்து, கோர்ட் ஏற்கனவே அளித்த தீர்ப்பை உறுதி செய்தனர்." உடலை , ஒரு தரப்பினரிடம் தந்தால், அடுத்த தரப்பினர்பிரச்னை செய்வர். இரு தரப்பினரும் இரு வேறு மதத்தை சேர்ந்தவர்கள். அதனால், பரி பாய் உடலை, மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் மருத்துவக்கல்லுõரியிடம் ஒப்படைப்பது தான் சரி' என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.
Saturday, March 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment