Saturday, March 8, 2008

ஒருவனுக்கு ஒருத்தி எனபது தான் எங்கள் மத கோட்பாடு

வரதட்சணை கொடுமை 7 பேர் மீது வழக்கு

மேலுõர்: அக்கா தங்கையை மணந்தவர் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் மனைவியை மேலும் வரதட்சணை வாங்கி வரச் சொல்லி கொடுமைப் படுத்தி உள்ளார்.
கீழ கள்ளந்திரியை சேர்ந்தவர் மந்தக்காளை. இதே ஊரைச் சேர்ந்த சாந்திக்கும் இவருக்கும் 92ல் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது ஏராளமான சீர் வரிசைகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு மூன்றும் பெண் குழந்தைகளாக பிறந்ததால், ஆண் குழந்தை வேண்டி சாந்தியின் தங்கை ராசாத்தியையும் இவர் திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஆண் மற்றும் பெண் என 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் ஆடு மேய்க்கும் சுசீலா என்பவருடன் மந்தக்காளைக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் வரதட்சணை வாங்கி வரச் சொல்லி சாந்தியை இவர் மற்றும் இவரது பெற்றோர் கொடுமைப் படுத்தி உள்ளனர். இந்த தகராறில் சாந்தியின் மண்டையை மந்தக் காளை உடைத்துள்ளார்.

இது குறித்து சாந்தி மேலுõர் மகளிர் ஸ்டேஷனில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மந்தக்காளை, அவரது தந்தை ராமையா, தாயார் மல்லிகா, சகோதரர் சேதுபதி, அவரது மனைவி சித்ரா, கார்த்திகா மற்றும் சுசீலா ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

நன்றி : தினமலர்


"பெண்களிடம் வரதட்சணை வாங்க கூடாது"மாறாக மகர் பணம் கொடுத்து திருமணம் முடிக்க வேண்டும் என்ற உன்னத கொள்கையை போதிக்கும் மார்க்கத்தை குறை சொல்லும் போது அறிவு இல்லாத காவி வெறியர்கள் இது போன்ற ஆட்களை திருத்தும் வேலையே இனி முதல் தொடங்கினால் நல்லது .

No comments: