வேதாரண்யம், மார்ச்.9-
வேதாரண்யம் அருகே எஸ்.டி.டி. பூத் கடையை அடித்து உடைத்து வாலிபரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாக்குதல்
வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறை செங்காத்தலைரோடு கடைவீதியில் சேக் தாவூது என்பவர் எஸ்.டி.டி. பூத் மற்றும் செராக்ஸ் கடைவைத்துள்ளார். இங்கு அதே ஊரைச்சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செல்லையன்(வயது32) வேலைபார்க்கிறார்.
இந்தநிலையில் அங்குள்ள ஒர்க்-ஷாப்புக்கு வந்த கார் பின்னோக்கி வந்தபோது அந்தக் கடையின் போர்டு நொறுங்கியது. இதைக்கண்ட செல்லையன் தட்டிக்கேட்டார். உடனே காருக்குள் இருந்த சிவசந்திரன்(26), ரசல் சாக்ரடீஸ்(35), சபரிநாதன்(29), அரவிந்தன்(25) ஆகிய 4 பேரும் கீழே இறங்கி வந்து கடையில் இருந்த கம்ப்ïட்டர், செராக்ஸ் மிசின் அகியவற்றை அடித்து நொறுக்கினர். செல்லையனையும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கடையில் இருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன்களையும் அள்ளிச்சென்றதாகவும் கூறப்படுகிறது.
கடையடைப்பு
இதுபற்றி வேதாரண்யம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தாக்குதலில் காயம் அடைந்த செல்லையன் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த சம்பவத்தைக் கண்டித்து அந்தப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்து அடைக்கப்பட்டு வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வேதாரண்யம் தாசில்தார் சுப்பிரமணி அங்கு விரைந்து வந்து, சம்பவம் பற்றி போலீசில் புகார் கொடுத்துள்ளதால் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர்களிடம் தெரிவித்தார். அதனால் கடையடைப்பு, மறியலை வியாபாரிகள் வாபஸ் பெற்றனர்.
4 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் துணைபோலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் பரமானந்தம், ஏட்டுகள் தனிக்கொடி, சேகர், பாலு, ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சிவசந்திரன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Thanks:Dailythathi
Saturday, March 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment