புதுடில்லி: ஆண்டு இறுதியில் மாணவர்களின் திறனை, தேர்வு வைத்து, ஆசிரியர்கள் மதிப்பிடுவது நடைமுறை. டில்லி பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட அனைத்துக் கல்லுõரிகளிலும், ஆசிரியர்கள் எப்படி கற்பிக்கின்றனர் என்பதை மாணவர்கள் மதிப்பிடப் போகின்றனர்.
டில்லி பல்கலைக் கழகத்தின் அகடமிக் கவுன்சில், முதுநிலை பட்டப்படிப்புகளில் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு துறையின் பாடத்திட்டம், அதை கற்பிக்கும் விதத்தில் என்ன மாற்றம் வேண்டும் என்பதை மாணவர்களிடம் இருந்தே அறிய திட்டமிடப்பட்டுள்ளது. பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் திறன் குறித்தும் மாணவர்களே மதிப்பிட உள்ளனர். இதற்காக, தனியாக அவர்களுக்கு படிவம் வழங்கப்படும். அதை பூர்த்தி செய்து தர வேண்டும். அந்த படிவத்தில்,
* ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை எப்படி உள்ளது?
* குறிப்பிட்ட பாடத்தின் வகுப்புகள், வழக்கமாக நடக்கிறதா? ஆசிரியர் தவறாமல் வகுப்புக்கு வருகிறாரா?
* மாணவர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு வகுப்பறையில் உரிய முறையில் சரியான விளக்கம் கிடைக்கிறதா?
* கலந்துரையாடல் வகுப்புகள் வழக்கமாக நடத்தப் படுகிறதா?
* செயல்முறை பயிற்சிக்கு போதுமான உபகரணங் கள் உள்ளனவா, கூடுதல் தேவை இருக்கிறதா ?
இது போன்ற கேள்விகள் கொண்ட படிவத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து அளிப்பர். மாணவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அடிப்படையில், சம்பந்தப் பட்ட ஆசிரியர் மீது துறைத்தலைவர் நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.வரும் 200809 கல்வி ஆண்டு முதல் இது அமல்படுத்தப்படும். தங்களை மாணவர்களை வைத்து மதிப்பிடுவது ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Monday, March 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment