பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப் பட்டவர்கள் தங்கி இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பது, கண்ணி வெடிகளை கண்டறிவது போன்ற பணிகளுக்காக, குட்டி பறக்கும் இயந்திரங்கள் உருவாக்கப் பட்டுள்ளன."மைக்ரோ ஏரியல் வெகிக்கிள்ஸ்' ( எம். ஏ. வி.,) என்ற, குட்டி பறக்கும் இயந்திரங்களை உருவாக்கும் பணியில், 10 ஆண்டுகளாக, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவை சேர்ந்த நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இவற்றின் பயன்பாடு குறித்த சோதனை, ஆக்ராவில் நடந்தது. அமெரிக்க ராணுவத்தின், தெற்கு ஆசிய பிரிவு லெப்டினென்ட் கர்னல் எரிக் ஸ்டிரினா இதில் பங்கேற்றார்.
இந்தியா, அமெரிக்கா உட்பட எட்டு நாடுகளை சேர்ந்த 12 குழுக்கள் இதில் பங்கேற்றன. இந்தியாவில் இருந்து நான்கு குழுக்கள் இடம் பெற்றன. ஐ.ஐ.டி., மாணவர்கள், இரண்டு குட்டி இயந்திரங்களை உருவாக்கி இருந்தனர்.குட்டி பறக்கும் இயந்திரங்கள், பேட்டரியில் இயங்குபவை. 30 செ.மீ., அளவில் உருவாக்கப்பட்டவை. சூட்கேசில், மடக்கி வைத்து விடலாம். "குட்டி இயந்திரங்கள் ஒரு கி.மீ., துõரத்துக்கு பறக்கும்; இயந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள், கண்ணி வெடிகளை படம் எடுக்கும்; சிறைப்பிடிக்கப் பட்டவர்கள் கட்டடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் இடத்தை சென்சார் மூலம் அறியும்' என, நிபுணர்கள் கூறினர்.

Thanks : Dinamalar
No comments:
Post a Comment