Monday, March 17, 2008

வேகமாக பனி உருகிவருகிறது : ஐ.நா. எச்சரிக்கை

உலகின் பனிப் படலங்கள் முன்பெப்போதையும்விட வேகமாக உருகிவருகின்றன: ஐ.நா. எச்சரிக்கை

அல்ப்ஸ் மலைத்தொடரில் வேகமாக பனி உருகிவருகிறது உறைந்து நிற்கும் ஏரிகளான உலகின் பனிப் படலங்கள் பல முன்னெப்போதையும் விட மிக வேகமாக உருகியும் கரைந்தும் வருவது, வெப்பவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உலக அரசாங்கங்கள் துரிதப்படுத்த அதிகாரம் வழங்கியுள்ளது என்று ஐ.நா. சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, வெப்பவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை பெரிய அளவிலும் தீர்மானமாகவும் திட்டமிடல் அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்று ஐ.நா. அதிகாரி நிக் நட்டால் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

உலகின் பனிப் படலங்கள் உருகிவரும் வேகம், கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கும் மேலாய் அதிகரித்துள்ளது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

அல்ப்ஸ் மற்றும் பிரனே மலைத் தொடர்கள் உள்ளிட்டு ஐரோப்பாவில் இந்த இழப்பு மிக அதிகமாக உள்ளது என்றும் அங்கு 90களுடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு வேகமாக பனி உருகிவருகிறது என்றும் இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

No comments: