Tuesday, March 18, 2008

நீலிக் கண்ணீர் ...................

முஸ்லிம்களிடையே ஆதரவு பா.ஜ., புதிய திட்டம்























லக்னோ: ""கட்சியின் பிரதமர் வேட்பாளரான அத்வானிக்கு, முஸ்லிம்களிடையே ஆதரவு திரட்ட, பெரிய அளவில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். வரும் லோக்சபா தேர்தலில் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிக அளவில் போட்டியிட டிக்கெட் கொடுக்க உள்ளோம்,'' என்று, பா.ஜ., மத்திய தேர்தல் குழு உறுப்பினர் ஷாநவாஸ் உசேன் கூறினார்.


லக்னோவில், அவர் கூறியதாவது:

காஷ்மீர் உட்பட அனைத்து மாநிலங்களிலும் எங்கள் கட்சி சார்பில், முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம். முஸ்லிம்களை ஒன்று திரட்ட, ஐதராபாத்தில், வரும் 4ம் தேதி முதல் துவங்கி மூன்று நாள் மாநாடு நடத்த உள்ளோம். அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெறும் வகையில், பெரிய அளவில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். இதன் மூலம் சிறுபான்மையினருக்கு நாங்கள் எதிரி அல்ல என்பதை நிரூபிப்போம்.இவ்வாறு உசேன் கூறினார்
Thanks: Dinamalar
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பிற்கினிய இசுலாமிய சமுதாயமே..........................
இன்று இவர்கள் வடிப்பது எப்படி பட்ட நீலிக் கண்ணீர் எனபது எல்லாருக்கும் தெரியும்.இது மட்டும் அல்ல இன்னும் இவர்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டி நம் வீடுகளுக்கே வந்து நம்முடைய கால்களை பிடித்து விட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை.காரணம் ஆட்சி வேண்டும் என்றால் இவர்கள் அடிவரை வேண்டுமானாலும் விழுந்து தொழுவார்கள்.இனிய சமுதாயமே இன்றைய இவர்களின் கூற்று இது இஸ்லாமியர்களின் இன்றையகால எழுச்சிக்கு கிடைத்த ஒரு வெற்றி. இஸ்லாத்தை அழித்து விடலாம் என்று தங்கள் ஆட்சி காலங்களில் அடக்கு முறைகளை கையாண்ட இவர்கள் இறைவனின் மிகப் பெரும் கிருபையால் இன்று இஸ்லாமியர்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் அழிந்து விடுவார்கள் என்ற நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ். இது இறைவன் இந்த சமுதாயதிற்கு கொடுத்த ஒரு மிகப் பெரிய வெற்றி.

ஒரு வேளை இவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால் ...........

இதற்கு முன்பு இவர்கள் ஆட்சியில் இருந்த போது சுடு காடு முதல் இராணுவ வீரனின் சவப் பெட்டி வரை அனைத்திலும் ஊழல் செய்து உடம்பை வளர்த்தார்கள். போதாக் குறைக்கு இன்னும் இந்தியா ஒழிற்கிறது ஒழிர்கிறது என்றார்கள்.எங்கே ஒளிருது என்று பார்த்தால் இவர்கள் செய்த கலவரங்களால் எரியும் இஸ்லாமியர்களின் குடிசை களிலும் இன்னும் அப்பாவி பெண்களை கர்ப்பழித்து கொளுத்தி விட்டத்தின் நெருப்பிலும் இந்த இந்திய ஒளிர்ந்து கொண்டிருந்தது.இனிய சமுதாயமே. சிந்திப்போம் .இனியும் ஒரு முறை இந்த இந்தியா ஒழிற வேண்டுமா ?.அப்படி ஒழிர்ந்து விட்டால் இனி இங்கே இஸ்லாமியர்கள் வாழ முடியுமா. இன்று இந்தியாவை பொருத்த வரை இங்கே நாம் எடுக்கும் முடிவு தான் இந்த நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும்.இதற்கு மேலே இருக்கும் செய்தி கூட ஒரு உதாரணம். இது இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வெற்றி.
இது நீடிக்க நாம் செய்ய வேண்டியது
இது நீடிக்க நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.இஸ்லாம் இந்த மனித சமுதாயத்துக்கு கொடுத்த ஒரு அருட் கொடை அது தான் சகோதரத் துவம் இது தான் இன்று நாம் பற்றி பிடிக்க வேண்டிய ஒரு கயிறு.இதை விட்டால் இனி நாம் நிலைமை கேள்விக் குறிதான். இந்தியாவின் முதுகெலும்பு இன்று நாம் தான்.இன்னும் சிந்திப்பீர்.இவர்களை எதிர் கொள்ள இன்று நாம் செய்ய வேண்டியது இந்திய அளவில் இவர்களை எதிர்க்கும் நெஞ்சுரம் கொண்ட ஒரு தலைமையை தேர்ந்து எடுப்பது தான்.இன்றைய சூழலில் அது பாப்புலர் பிரோன்ட் ஆப் இந்தியா (Popular Front Of India)என்ற ஒரு தலைமையால் மட்டுமே இன்று எம்போவேர் (Empower India) இந்தியாவை உருவாக்க முடியும்.இஸ்லாமியர்களின் தலையெழுத்தை தீர்மானிக்க இன்றே இணைவோம் . சர்ச்சைகள் களைந்து சத்திய மார்க்கம் தலையெடுக்க தயாராவோம் .இந்தியாவில் இருந்து பாசிசத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் துடைத்து ஒழிக்க ஒன்று படுவோம்ஓரணியில்.

உங்கள் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள

No comments: