Monday, March 17, 2008

டில்லி அருகே கிராமங்களில் அதிர்ச்சி தகவல்

பெண்களின் கல்வியறிவு கணக்கெடுப்பு: டில்லி அருகே கிராமங்களில் அதிர்ச்சி தகவல்

குட்காவ்: டில்லி அருகே 62 கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தியதில், மொத்தமே ஏழு பெண்கள்தான் கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது."அனைவருக்கும் கல்வி இயக்கம்' என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பெண்கள் முன்னேற்றம், குழந்தைகளை ஆரோக்கிய மாக வளர்ப்பது, அறியாமையை போக்குவது போன்றவை இத்திட்டத்தின் குறிக் கோள். திட்டத்தை அமல்படுத்த, அரியானா மாநிலம் மேவாடு பகுதியில் 62 கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தப் பட்டது.
கல்வி அறிவு பெற்ற பெண்கள் பற்றிய புள்ளி விவரத்தில், அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.புள்ளி விவரம் எடுக்கப்பட்ட 62 கிராமங்களிலும், மொத்தமே ஏழு பெண்கள்தான் படித்தவர்கள். படித்தவர்கள் என்றால், கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள்.மேவாட் பகுதி மகளிர் மற்றும் குழந்தைகள் நல அதிகாரி சஞ்சன் தல்வால் கூறுகையில், "சமூகக் கல்வித் திட்டத்தை செயல்படுத்த, மேவாட் பகுதியில் 62 கிராமங் களிலும் படித்த பெண்கள் கிடைக்கவில்லை.இதனால், மற்ற இடங்களைச் சேர்ந்த பெண்களையே இங்கும் பணியமர்த்தியுள்ளோம். கிராமங்களில் இருந்து வெகு தொலைவில் பள்ளிகள் இருப்பதாலும், மூடப் பழக்கவழக்கங்களாலும், பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவது தெரியவந்துள்ளது. இதனால், மற்ற இடங் களிலுள்ள பெண்களைத் திரட்டி கல்விப் பயிற்சி அளிக்க முயற்சிகளை செய்துவருகிறோம்' என்றார்.

Thanks:Dinamalar

No comments: