Thursday, March 13, 2008

நுகர்வோர் தினமும் பட்டினிச் சாவுகளும்

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மார்ச் 15 - நுகர்வோர் தினம்நுகர்வோர் தினமும் பட்டினிச் சாவுகளும்

மனிதன் தன் வேலைகளை தானே நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு காலம் இருந்தது. அது வரலாறுகளில் கற்காலம் என்றழைக்கப்படுகிறது. வாழ்வாதாரத்திற்கான உணவை அவன் வேட்டையாடித்தான் பெற்றுக்கொண்டான். எனவே உணவின் பற்றாக்குறை ஏற்படும்போது அது கிடைக்கும் இடம் தேடி இடம் பெயர்ந்தான்.இடம் பெயர்தலால் ஏற்படும் கஷ்டங்களும், புதிய தட்பவெப்ப நிலைகளால் ஏற்படும் இழப்புகளும் அவனைச் சிந்திக்கத் தூண்டியது. ஒரே இடத்தில் இருந்து கொண்டு உணவைப் பெறுவது பற்றி யோசித்தான். பயிர்செய்யும் தொழில் கற்றான். பயிர் செய்த தானியங்களில் எஞ்சியதைப் பிறருக்குத் தந்து, அவர் பெற்றமகசூலை வாங்கி வந்தான்.

வியாபாரம் பிறந்தது. இந்த வியாபாரத்தை இலாப நோக்கில் செய்ய எண்ணினான். உற்பத்தியை அதிகரிக்க உபகரணங்களை வேண்டும். உபகரணங்களை உருவாக்கத் தலைப்பட்டான். தொழிற்புரட்சி முகிழ்ந்தது.தொழிற்புரட்சி யோ எண்ணியதை விட ஏகபோக உற்பத்தியை வழங்கியது. உற்பத்தியானதை விற்றாக வேண்டும். விற்றுத் தீர்ப்பதற்கு உள்நாட்டுச் சந்தை போதாது. உலகளவில் சிந்தித்தான். உலகமயமாக்கல் ஏற்பட்டது. மனிதன் வாழ வேண் டுமானால் வாங்கியே ஆக வேண்டும் எனும் கோட்பாடு மனிதன் மீது திணிக்கப்பட்டது. அவ்வாறு வாங்கும் பொருட்களில், மனிதன் ஏமாற்றப் பட்டுவிடக் கூடாது என்ற சிந்தனையில் உதயமானதே நுகர்வேர் தினம்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் வாங்கும் திறனைக் கொண்டு அளவிடப்படும் அளவுக்கு, சந்தைப் பொருளாதாரம் நாட்டின் அச்சாணியாகத் திகழ்கிறது. இதில் உற்பத்தியாளர் களும் தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்து பளபளப்பான விளம்பரங்கள் மூலம் சுலபமாக அதிக லாபத்திற்கு விற்று விடுகின்றனர். நுகர்வோர் எதனை வாங்க வேண்டும் என்பதை பொருளின் தரம் நிச்சயிப்பதை விட விளம்பரங்களே அதிகம் நிச்சயிக்கின்றன. இதில் அதிகம் வஞ்சிக்கப்படுபவர்கள் குழந்தைககள் தான். 2005ம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கான மிட்டாய் விளம்பரங்களில் மட்டும் 4250 கோடி ரூபாகள் முதலீடு செளிணியப்பட்டுளது எனஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ஒரே தரமுடைய பொருட்கள், கண்கவர் பாக்கட்களில் அடைக்கப்பட்டு, நன்கு அறிமுகமான நிறுவனத்தின் பெயரால் விற்பனைக்கு விடப்பட்டால் அது அதிக விலையாக இருந்தாலும் 73% பேர் அதனை விரும்பி வாங்குகின்றனர். ஆனால் அதே பொருட்கள் வெள்ளை பாக்கட்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தால் வெறும் 13% மக்ககள் மட்டுமே வாங்குகின்றனர் என மற்றொரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

தெருக்களில் திறந்த நிலையில் விற்கப்படும் தின் பண்டங்களை குழந்தைகளுக்கு நாம் வாங்கித் தருவது இல்லை. காரணம் அவை ஆரோக்கியம் அற்றவை என்பதால். ஆனால் அதே நேரம் மதிமயக்கும் விளம்பரங்களுடன் பரத்தி வைக்கப்படும் உடல்நலனைப் பாதிக்கும் உணவுப் பண்டங்களை அதிக விலைகொடுத்து வாங்கித் தருகின்றோம். குழந்தைகளும் அதனையே அதிகம் விரும்பி உண்கின்றனர். இதுபோன்ற உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் உணவுககள் மனிதனின் ஆரோக் கியத்தைச் சீரழிப்பதில் பெரும் பங்குவகிக்கின்றன. பெருகி வரும் ஃபாஸ்ட் ஃபுட்கள் யதார்த்தத்தில் அதிக சுவை உடையதாகவும்,நாகரிகமானதாகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் அமையலாம். ஆனால் அவைகளால் ஏற்படும் பின் விளைவுகளை பலர் சிந்திப்பதில்லை. விஞ்ஞான வளர்ச்சியின் முன்னேற்றம் மனிதனை இருந்த இடத்தைவிட்டு எழ விடாமல் செய்து விட்டது. அதிலும் இவை போன்ற கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளால் உடல் பருமன் (Obesity) ஏற்படுகின்றது.

உலகமயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரம் உலக அளவில் ஒருவித பொருளாதார ஏற்றத்தாழ்வைத்தான் ஏற்படுத்தியுள்ளது . அதிகப்படியான வருமானம் அதிக நுகர்வை ஏற்படுத்தி அதனால் உடல் பருமனால்அவதியுறும் அதேவேளை, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி பட்டினிச் சாவுகளையும் நாம் இப்பொழுது பார்க்கிறோம். ஜனநாயகத்தின் காவலாளிகள் என்று வீர முழக்கம் செய்யும் ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் கண் ஜாடை அசைவுகளுக்கு ஒப்ப நடக்கவில்லை என்ற காரணத்திற்காக பிற நாடுகளின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து எண்ணற்ற மனித உயிர்களைக் கொன்று குவிக்கின்றன.நுகர்வேர் உரிமைகள் காக்கப்பட வேண்டும் எனக் கொண்டாடப்படும் இந்நாளில், அனைத்து தகுதியும் வசதியும் இருந்தும் எதனையுமே பெற்றுக் கொள்ள முடியாமல் முடமாக்கப்பட்டிருக்கும் சிலரையும் சேர்த்து நினைவு கூர்வதே இந்நாள் கொண்டாடப் படுவதன் நோக்கத்தை நிறைவு செய்வதாக அமையும். வளம் மிக்க ஈராக்கின் அனைத்து எண்ணை வளத்தையும் தானே அனுபவிக்க வேண்டும் என்தற்காக, பொய் காரணங்கள் கூறி அந்த நாட்டின் மீது படையெடுத்தது அமெரிக்கா. அத்தோடு ஈராக்கை சல்லடையாக்கியது. இன்று நடைபிணங்களாக அம்மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு யார் இழப்பீடு தருவது? ஃபலஸ்தீனர்கள் இன்றுசொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் அவல நிலை. ஒரு நேரத்திற்கு மட்டும் போதுமான ரொட்டித்துண்டை உண்டு வறுமையில் வாடுகின்றான் ஃபலஸ்தீனக் குடிமகன். அவனுக்கு யார் இழப்பீடு தருவது?சொந்த மாநிலத்திலேயே சொந்தங் களையும், சொத்துகளையும் இழந்து அகதிகள்முகாமில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள் குஜராத் மக்கள். அவர்களுக்கு யார் இழப்பீடு தருவது?

மார்ச் 2008 விடியல் வெள்ளியில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம்.

வெளியீடு:
Gulf Social Forum (GSF)

No comments: