சமீப காலங்கள் வரை மாணவர்கள் விண்வெளி துறை பற்றிய பாடப் பிரிவினைப் படிக்க வேண்டுமென ஆர்வம் இருந்தாலும், அதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இல்லை என்கிற நிலை இருந்து வந்தது. ஆனால், தற்போது மாணவர்களின் ஆர்வத்துக்குத் தீனி போடுவது போன்று விண்வெளி துறையைப் பற்றிய பாடப் பிரிவுகள் இளநிலை பொறியியல் பட்டப் படிப்பாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும், சிறப்பு என்னவென்றால் இதனை "ஐ.எஸ்.ஆர்.ஓ.' எனப்படும் "இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன்' இதனை வழங்குவதுதான்.
இதற்கென தனியே ஒரு கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தும் பெற்றுள்ளது. இக்கல்வி நிறுவனமானது கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள பொன்முடி எனுமிடத்தில் அமையவுள்ளது.
இக்கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்றழைக்கப்படும். இங்கு ஸ்பேஸ் டெக்னாலஜி குறித்த இளங்கலை பொறியியல் பட்டப் படிப்பும், ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் ஸ்பேஸ் அப்ளிகேஷன் குறித்த ஒருங்கிணைந்த முதுநிலை பொறியியல் பட்டப் படிப்பும் வழங்கப்படும். அது மட்டுமின்றி, விண்வெளி ஆராய்ச்சி பற்றிய முதுநிலை பட்டங்கள், முனைவர் பட்டங்கள் குறித்த படிப்புகளும் படிப்படியாக வழங்கப்படவுள்ளது.
மேலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தேவைக்கேற்ப பாடத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றது. இங்கு பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகிறது.
இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகள்:
1. பி.டெக். ஸ்பேஸ் டெக்னாலஜி. இதில் சிறப்பு பாடப் பிரிவாக ஏவியானிக்ஸ் படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான மொத்த சேர்க்கை இடங்கள் 50.
2. பி.டெக். ஸ்பேஸ் டெக்னாலஜி ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங். இதற்கான மொத்த சேர்க்கை இடங்கள் 40.
முதுகலை பொறியியல் படிப்புகள்:
இங்கு ஐந்து வருட ஒருங்கிணைந்த பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றது. இப்படிப்பானது ஐந்து வருட ஒருங்கிணைந்த அப்ளைடு சயன்ஸ் ஆகும். இதில் ஆய்வு பாடப் பிரிவுகளாக அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோ பிசிக்ஸ், அட்மாஸ்பெரிக் சயின்ஸ், மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் ரிமோட் சென்சிங் ஆகியவை வழங்கப்படுகிறது.
இதில் சேர ஐ.ஐ.டி.க்களுக்கான சேர்க்கைக்கென நடத்தப்படும் "ஜாயின் என்ட்ரன்ஸ் டெஸ்டி'னை எழுத வேண்டும். இதன் மெரிட் பட்டியலுடன் ஐ.ஐ.டி.க்களில் எந்த பாடப் பிரிவையும் தேர்ந்தெடுக்காதவர்கள் இதில் சேர தகுதி பெறுவர்.
இக்கல்வி நிறுவனத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் சிறப்புமிக்க ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் பாடத் திட்டங்களை வகுப்பதுடன் மாணவர்களுக்குக் கலந்துரையாடலும் வழங்குவர். இக்கல்வி நிறுவனத்திற்கென தனியே உயர் தொழில்நுட்பக் கல்வி நிலையம் உள்ளது. மாணவர்களுக்குப் படிப்பிற்கான செலவுகளை உதவித் தொகையுடன் ஐந்து வருடம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் வழங்கப்படுகிறது.
மேலும், மேற்கூறிய படிப்பில் சேர்க்கை பெற்றவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் அவர்கள் விஞ்ஞானி/பொறியாளர் பதவியில் பணி நியமனம் வழங்கப் பெறுவர். எனவே, பல இந்திய மாணவர்களின் கனவான விண்வெளி ஆராய்ச்சியில் பிரகாசிக்க வேண்டும் என்ற நிலையினை இக்கல்வி நிறுவனத்தின் சேர்க்கை மூலம் வெற்றி கனியாக்கிக் கொள்ளலாம்.
இதுதவிர, படிப்பு மட்டுமின்றி உயர் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுபவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் வேலையும் கிடைக்கும்.
Thanks:
இரா. நடராஜன், உதவி இயக்குநர், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககம்
ஐ.டி.ஐ. வளாகம், கிண்டி, சென்னை } 600 032.
Monday, March 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment