Thursday, March 20, 2008

இந்த ரீதியில் நாம் நம் சமுதாயத்தைபலபடுத்தினோம் என்றால்


அச்சுறுத்தல்களும், அடக்குமுறைகளும்,கொலை வெறித் தாக்குதல்களும், பெண்கள், குழந்தைகள்,இளைஞர்-கள், வயோதிகர்கள் - இவர்களுக்-கெதிரான பாலியல் வன்முறைகள், சித்தரவதைகள், கொலைகள் என்றும், பொதுச் சொத்துகள், பாட சாலைகள், கல்விக்கூடங்கள்,மருத்துவமனைகள், வாழ்விடங்-கள், வரலாற்றிடங்கள் இவைகளை அழித்தல், நாசம் செய்தல் என்றும் எப்போதும் அச்ச உணர்வுகளுடனும், தாங்கள் எப்போது இலக்காக்கப் படுவோமோ என்ற பயந்த பலஹீனமான சூழ்நிலையில் வாழ்ந்துக் கொண்-டிருக்கும் சமூகம் எது? என்றுவினவினால்! வெட்கித் தலை-குனியும் நிலையில் முன் நிற்கும்முதல் சமூகம் எம் முஸ்லீம் சமூகமே!


ஏன் தெரியுமா?


உலகில் கொள்கை ரீதியாக தொடங்கி, தனி மனித வாழ்வு வரை நடந்தேறும் அத்துனை எதிர்ப்புகளும், சவால்களும் முஸ்லீம்க-ளுக்கெதிராக என்று மட்டும் திரும்பி நிற்பது, ஏன்? தெரியுமா? ஓரிறைக் கொள்கையில் 'புரட்சி"என்று தொடங்கி, கொள்கை ரீதியாக,சித்தாந்த ரீதியாக, அரசியல் ரீதியாக, இஸங்கள் ரீதியாக,மதரீதியாக என்று ஒட்டுமொத்தமாக உலகில் தோன்றி தலைதூக்கி மனித இனத்தையே கபளீகரம் செய்யும் அனைத்து சித்தாந்தங்களுக்கும், முதல் முன் தடையாக, சவாலாக நின்று, வென்று ஒட்டுமொத்த மக்களையும்தன் பக்கம் ஈர்க்கும் மாபெரும் கொள்கையாக இஸ்லாம் இருப்பதே. அதைச் சார்ந்து முன் மொழிபவர்களாக முஸ்லீம்கள் இருப்பதே.


என்றாலும் இத்தகையஅழிவுகள் ஏற்படுத்திய தாக்குதலுக்கான காரணம் 'பலமின்மை" என்று ஒரே வரியில் முடித்து ஓராயிரம் விளக்கங்கள் குறிப்பிடலாம்.ஆம் அத்தனை பலஹீனங்கள்.அன்று பலமுடன் வாழ்ந்து சென்ற கொள்கைவாதிகளின் வீழ்ந்து மடியும் வாரிசுகளுக்கு…!பலஹீனம் என்றால் ஈமானில் (இறைநம்பிக்கையில்) ஏற்பட்ட பலஹீனம் என்று குறிப்பிடுவதற் கில்லை. காரணம் ஈமானிய பலம் மட்டும் இருப்பதினால் தான் இத்துனை அடக்கு முறைகளிலும் முஸ்லீம்களாகவே நின்று வீழ்கின்றது எம் சமூகம். வீழ்ச்சிக்கான காரணம் 'பலம்" பலம் சேர்ப்பதில் ஏற்பட்ட பலஹீனம். 'பலம்" என்றால் தனி மனிதன் தரித்திருக்கும் பலம். அவனுடைய அறிவு ரீதியான, மன ரீதியான இவைகளுக்கு அப்பாலும்உடல் வலிமையில் மிளிர்கின்ற பலம், ஆயுத பலம்.ஆம் உயிரினங்களில் ஊர்வன, நடப்பன, பறப்பன என்ற எல்லாவற்றிலும் பலம் வாய்ந்தவை தான் ஆளுமையுடன் வழி நடத்துகின்றது தன் கூட்டத்தினை. உலக அளவில் பலம் பொருந்திய வல்லரசாக கருதப்படும்அமெரிக்காதான் ஐ.நா. சபையையே அடக்கி வைத்துள்ளது.


இன்றைய மேற்குலக நாடுகளும், ஐரோப்பிய நாடுகளில் பலவும் உலகை அச்சுறுத்துவதற்கான முதல் காரணம் பலம் தான் என்றால் அது மிகை யல்ல. இவர்கள் தங்கள் வெளிப்படையான அந்தரங்கமான எதிரிகளையும், இன்னும் இவர்களுக்கே தெரியாமலே இவர்களைஅழித்துவிட கங்கணம் கட்டும் எதிரிகளையும், பயமுறுத்தி வைத்திருப்பது, பயம் கொள்ள வைத்திருப்பது தாங்கள் தரித்திருக்கும் பலத்தின் மூலமாகதானே! இவர்கள் தரித்திருக்கும் பலம் படைத்தவன் அறிவுறுத்தியது.


ஆம் இறைவன் தன்வழிகாட்டி மூலம் (திருக்குர்ஆன்) மனித சமூகத்திற்கு அறிவுறுத்திய பலம் இது. இதைப் பற்றிப் பிடித்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தவர்கள் பேதமில்லாது மிளிர்கின்றார்கள். அவர்கள் யாராக இருந்தாலுமே. ஆம்! உலகில் சில இடங்களில் சிற்சில கூட்டங்கள் மேற்கூறப்பட்ட வல்லரசுகளுக்கே இன்று மாபெரும் அச்சுறுத்தலாக, சவாலாக விளங்குகின்றன. இதன் விளைவு தீவிரவாதத்திற்கு, பயங்கரவாதத்-திற்கு எதிரான போர் என்று அமெரிக்கா பிரகடனப்படுத்தி மொத்த வல்லரசுகளையும் தன்னோடு இணைத்துக் கொண்டு இச்சிறு கூட்டத்திற்கெதிராய், ஆஃப்கானில் இருந்து தொடங்கி, ஈராக் வழியாக ஈரானையும் தொடரமுடிவு செய்து படை பலனையும்,ஆயுதங்களையும், பின்னேசவப்பெட்டிகளையும் அனுப்பிக்கொண்டிருப்பதையும் இன்று நம்கண்களின் முன் காணமுடிகின்றது.


இன்னொரு கரையில் பாலஸ்தீனிலும், லெபனானிலும் மிக சொற்ப எண்ணிக்கையில் படைத்தவனுக்காக பலம் தரித்து நிற்பவர்களுக்கெதிராய் தொடங்கிய யுத்தத்திலும் இன்று அழிந்து வரும் இஸ்ரேலிய பலத்தையும் எம் கண்களின் முன் காண முடிகின்றதென்றால் அதன் பலம்(ன்) இச்சிறு கூட்டங்கள் தாங்கியிருக்கும் ஈமானிய எழுச்சியுடன் கொண்ட, இறைவன் சொல்லும், இறைத்தூதர் சொல்லும் பலம் ''ஆம்,


அவர்களை (நிராகரிப்பவர்களை) எதிர்பதற்காக உங்களால் இயன்ற அளவுபலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள், இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்) அவர்களை நீங்கள் அறியமாட்டீற்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்.அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச்செலவு செய்தாலும் (அதற்கான நற்;கூலி)உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்.(அதில்) உங்களுக்கு ஒரு சிறுதும் அநீதம்செய்யப் படமாட்டாது""


அல்க்குர்ஆன் (8:60)


'பலம்" கொண்டு தங்களை தயார் படுத்திய எல்லோருக்கும் பலன் ஒரே மாதரியாக கிடைப்பதில்லை. காரணம் அல்லாஹ் கூறுகின்றான் -


(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி (யின் மூலம் தீர்ப்பை) தேடிக் கொண்டிருந்தால்,நிச்சயமாக அவ்வெற்றி (முஸ்லீம்களுக்கு) வந்துவிட்டது. இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்குநலமாக இருக்கும், நீங்கள் மீண்டும் (போருக்கு)வந்தால் நாங்களும் வருவோம்.உங்களுடைய (பலம்) படை எவ்வளவுஅதிகமாக இருந்தாலும், அது உங்களுக்குஎத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவேஅல்லாஹ் முஃமீன்களோடு தான் இருக்கின்றான்.(என்று முஃமீன்களே கூறிவிடுங்கள்).


அல்குர்ஆன்(8:19)


ஒ! முஸ்லீம் சமூகமே! இன்று நம் சமுதாயம் எல்லா துறைகளிலும் பலஹீனமடைந்து காணப்படுகின்றது. உலகத்திற்கு நாகரித்தை கற்று தந்த இந்த சமூகம் கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் பலஹீனமடைந்து காணமுடிகிறது. மருத்துவ உலகின் தந்தை என்று போற்றப்பட்ட முஸ்லீம் சமூகம் ஒரு மாத்திரைக்கு மேற்கத்தியவர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை! உலக பொருளாதாரத்தையே மாற்ற வல்லமை கொண்ட முஸ்லீம்கள் மேற்கத்தியவர்களின் கால்களில் மண்டியிட்டு கிடக்கும் நிலை !


இந்த நிலை மாற வேண்டுமென்றால் முஸ்லீம்களையும், இஸ்லாத்தையும் பலப்படுத்த வேண்டும். அந்த பலம் ஈமானிய பலம், கல்வி பலம், பொருளாதார பலம்,ஆயுத பலம் போண்ற எல்லா துறைகளிலும்கவணம் செலுத்த வேண்டும்.


இந்த ரீதியில் நாம் நம் சமுதாயத்தைபலபடுத்தினோம் என்றால் மீண்டும் இவ்வுலகில்தலைநிமிர்ந்த சமுதாயமாக முஸ்லீம் சமுதாயம்மாறும் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை! இன்ஷா அல்லாஹ்!


நன்றி : -காதர் அலி


Jazakkallahu hairen

No comments: