மார்ச் 8 – உலகம் முழுவதும் ஓர் சடங்காக அனுஷ்டிக்கப்படும் ''உலக மகளிர் தினம்"" கொண்டாட்டங்கள் நிறைவடைந்து விட்டன.பெண்கள் அமைப்புகள் என்று உலகில் இருக்கும் எல்லா அமைப்புகளும் அன்றைய தினம் கூடி பெண்கள் நிலைப்பற்றி விவாதித்து முடித்திருப்பார்கள். உலகில் பல்வேறு நாட்டு அரசு அரசமைப்புகளும் இந்த மகளிர்தினத்தை முன்னிட்டு பல சலுகைகளை பெண்களுக்கு வழங்குவதாக பெருமையடித்து முடித்திருப்பார்கள். மேலும் பெண்ணுரிமை பற்றிபேசும் பல குறும்புத்தியுள்ள பெண்ணியக்கங்கள் இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு இஸ்லாத்திற்கு எதிரான பல பொய்களையும் அள்ளி வீசியிருப்பார்கள்.
இத்தருனத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பல செய்தி ஊடகங்களிலும் இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு இஸ்லாமியஎதிர்ப்பு பிரச்சாரத்தை செய்து முடித்திருப்பார்கள். இத்தகைய சூழலைஎதிர்க்கொள்ள ஓர் இஸ்லாமிய பெண்கள்அமைப்பு அவசியம் என்ற கருத்தினை மையப்படுத்துவதே இந்த சிறு கட்டுரையின் நோக்கமாகும்.
உலக மகளிர் தினம் தோற்றம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால், இன்று உலகில் எல்லா அட்டூழியங்களையும், அநாகரிக செயலில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் என்ற நகரத்தில் 1909ஆம் ஆண்டுமுதல் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஏனென்றால் ஓர் தொழிற்சாலையில் வேலைபார்த்த பெண்கள் தங்களுடைய உரிமைகளை கேட்டு போராடிய போது அன்றைய அமெரிக்காஅரசால் கடுமையாக நடத்தப்பட்டார்கள். அதை நினைவுறுத்தும் முகமாக ஜ.நா. சபையால்1975ஆம் ஆண்டு ''மார்ச் 8"" உலகமகளிர் தினம் என்று அறிவிக்கப்பட்டு இன்றும்தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் தினத்தின் முக்கிய நோக்கம்
பெண்கள் தினத்தின் முக்கிய நோக்கம் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும், பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து அநீதிகளும் ஒழிக்கப்படவேண்டும் என்பதே! ஆனால் பெண்கள் தினம் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை மேற்சொன்ன நோக்கம் ஓரளவாவது நிறைவேறி வருகிறதாஎன்றால் ஓர் அதிர்ச்சியளிக்க தக்க உண்மையே காணக்கிடைக்கிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்,கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்தேவருகிறது. மக்கள் தொகை வளர்ச்சி சதவீதத்தை விட, நாகரீக முன்னேற்றம் என்ற சதவீதத்தை விட பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களின் வளர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.எந்தெந்த ரீதியில் அவர்களுக்கு எதிராக அநீதங்கள் நடக்கிறது என்பதை பட்டியலிட்டால் ஏடு தாங்காது.குறிப்பிடத்தக்க சிலவற்றை கூறுவதென்றால் வரதட்சனைக் கொடுமை, பாலியல் கொடுமை,குடும்ப வன்முறை, பெண் சிசுக் கொலை என்பவற்றை குறிப்பிடலாம். ஆனால்மேற்சொன்ன எந்த ஓர் கொடுமைகளையும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறிக்கொள்ள எந்த பெண்ணியக்க வாதிகளும் முன்வரவில்லை. காரணம் அத்தனை பெண்ணியக்கங்களும் பெண்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய கொடுமைகளை தடுத்துநிறுத்த சக்தியற்ற காரணத்தால் இஸ்லாத்தைநோக்கி அவர்கள் பார்வை திரும்பியுள்ளது.காரணம் மேற்கொண்ட கொடுமைகள்அனைத்தும் பெண்களுக்கு எதிராக இஸ்லாத்தை தவிர மற்ற மதங்களையும், வழிமுறைகளையும் பின்பற்றக் கூடியவர்களிடமே நடக்கிறது என்பது தான் நிரூபிக்கப்பட்ட உண்மை!
ஆனால் பெண்ணுரிமை பேசும்இயக்கங்களோ, இஸ்லாத்தில் பெண்களுக்குபாதுகாப்பு இல்லை என்றும் அடிமைத்தனமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் கூப்பாடு போடுகின்றார்கள். ஆனால் இஸ்லாமோ ஒருபெண்ணுடைய ரோமம் கூட பாதுகாக்கப்படவேண்டியவை என போதித்து அதைகடைப்பிடித்தும் வருகிறது. இந்த ரீதியில்உலகில் நடந்து வரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பட்டியலிட்டு காட்டுவது இந்தகட்டுரையின் நோக்கமல்ல. மாறாக இஸ்லாமியபெண்கள் அமைப்பு எப்படி செயல்பட வேண்டும்என்பதே நாம் பெற வேண்டிய தெளிவு. அந்த ரீதியில் பெண்களுக்கு இஸ்லாம் தந்த உரிமைகளின் ஓர் பார்வையை நம் மணக்கண் முன் கொண்டு வருவோம்.
கல்வி – கல்வியைக் கற்பது முஸ்லிமானஆண், பெண் இருபாலரின் மீதும்கடமையாகும். நபி (ஸல்) அவர்கள்
கல்வியறிவை இஸ்லாமிய ஆண் மற்றும்பெண்கள் தேடி கற்பது பர்ளு கிபாயா(கட்டாயம்) ஆகும் - இமாம் கஸ்ஸாலி(ரஹ்)
பத்ருப் போரில் முஸ்லீம்களிடம் தோல்வியைத்தழுவி கைதிகளாக்கப்பட்டவர்களிடம் ஒருநிபந்தனையை நபி (ஸல்) அவர்கள்விதித்தார்கள். கைதிகளில் இருந்தகல்வியாளர்கள் முஸ்லீம்களுக்கு கல்வியைபோதித்தால் விடுதலை அளிக்கப்படும் என்பதுதான் அந்த அற்புத நிபந்தனை. இதன்காரணமாக முஸ்லீம்களில் உள்ள ஏராளமானஆண், பெண்கள் கல்வியை கற்றுக்கொண்டார்கள். அந்த மக்கா கைதிகளிடம் கல்வியைக் கற்றுக் கொண்ட பெண்களில்ஒருவர் தான் உம்முல் முஃமினீன் ஹப்ஸா(ரலி) அவர்கள்.இஸ்லாத்தைப் போல பெண் கல்விக்குஅவ்வளவு ஆர்வமூட்டித் தூண்டிய மார்க்கம்இவ்வுலகில் வேறு இல்லை.
இஸ்லாம்கல்வியோடு ஒழுக்கத்தையும்இணைத்துள்ளது.பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் கல்வியை மையப்படுத்தி இல்லை,ஒழுக்கத்தையே மையப்படுத்தியுள்ளது. எனவேதான் இஸ்லாத்தின் அஸ்திவாரமாக ஒழுக்கம் பேணப்படுகிறது. ஒழுக்கமில்லாத ஒழுக்கம்தவறிய கல்வி, அது எத்தகைய கல்வியாக இருந்தாலும் அதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதித்ததே இல்லை.பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் பாலியல் கொடுமைகள் தான். அதில் முதன்மையானது விபச்சாரம் தான். இஸ்லாம் கற்புக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறது.விபச்சாரத்தின் முன்னோடியான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் தடைசெய்கிறது.
விசுவாசிகளே! நீங்கள் விபசாரத்தின் பக்கம்நெருங்காதீர்கள், ஏனெனில் நிச்சயமாக,அதுமானக் கேடானதாகவும், வேறுகேடுகளின் பால் இழுத்துச் செல்லும் தீயவழியாகவும்இருக்கிறது.
(17:32)
விபச்சாரத்தின் முதல் நெருக்கம் ''பார்வை""தான். இருபாலாரும் ஒன்று சேரும் போது கண்தான் சந்திப்பை ஏற்படுத்துகின்றது. சமீபத்தில் ஓர் ஆராய்ச்சி அறிக்கையின்முடிவு இப்படிச்சொல்கின்றது. காதால் கேட்பதால் 20% மனதில் பதிகின்றன,கண்ணால் பார்ப்பதால் 30% மனதில் பதிகின்றன, காதால் கேட்டுக்கொண்டு,கண்ணால் பார்த்தால் 50% - 75% மனதில்பதிகின்றது. இந்த ரீதியில் தான் இஸ்லாம்ஆண்கள், மற்றும் பெண்கள் மத்தியில் ஓர் பர்தா என்ற திரையை போட்டு வேறுபடுத்துகின்றது. இதை அறியாத பெண்ணியக்க வாதிகள் இதை அடிமைத் தனம்என்று கூக்குரலிடுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலைகளை எதிர் கொள்ள இஸ்லாமிய பெண்கள் அமைப்புகள் அதிகம் உருவாக வேண்டும். போலி பெண்ணியக்கவாதிகளின் போலி வேஷத்தை கலைக்க வேண்டும். போலி பெண்ணியக்கவாதிகளின் உண்மையான முகத்தையும், அவர்கள் பெண்களை எப்படி சீரழித்து வருகின்றார்கள் என்பதை ஓர் கண்ணோட்டம் பார்ப்போம்
1) அவர்கள் பெண்கள் கல்வி என்ற பெயரில்,வீட்டிலிருந்து பெண்களை வெளியே கொண்டு வருவார்கள்.
2) ஆணையும், பெண்னையும் கூட்டாக படிக்க வைப்பார்கள்.
3) பெண்களின் இயற்கையான வெட்கத்தை விரண்டோடச் செய்வார்கள்.
4) பெண்சுதந்திரம் என்ற பெயரில், பெண்களை வெளிவுலகிற்கு இழுப்பார்கள்.
5) ஆணும், பெண்ணும் சமம் எனும் கோஷத்தை பெண்களை வைத்தே எழுப்பச் செய்வார்கள்.
6) ஆண் மற்றும் பெண்கள்இரண்டரக் கலந்து செயல்பட வைப்பார்கள்.
பிறகு இயற்கை (ஷைத்தான்) தனது வேலையை செய்யத் தொடங்கும். காமம், மனோஇச்சை தலைதூக்கும். ஆங்காங்கே நைட் கிளப் உருவாகும்.அது சிறிது சிறிதாக வளர்ந்து விபச்சார விடுதியாக மாறும். பிறகு அரசு அனுமதியுடன் நிர்வாணிகள் மன்றம் தோன்றும். இது நாளடைவில் பெண் சுதந்திரமாக பேசப்படும். இந்த நிலைக்காகத்தான் உலகின் அனேக பெண் இயக்கங்கள் போராடி வருகின்றன.எனவே தான் இன்று உலகம் முழுவதும் பெண்கள் ஓர் போகப் பொருளாக பயன்படுத்தப் படுகின்றது.
இதை முற்றிலும் தடுக்கும் சக்தி இஸ்லாத்திற்குமட்டுமே உண்டு என்ற உண்மைநிலையைஉணர்ந்தே இஸ்லாத்தை வேறடி மண்ணோடு கிள்ளி எறிந்திட வேண்டும் என்ற ஆசை அவர்களிடம் காணப்படுகின்றது. அதனால்தான் இஸ்லாம் பெண்களின் உரிமைகளை வழங்கவில்லை, அவர்களின் சுதந்திரத்தை பறிக்கின்றது, அவர்களை இருட்டறையில் அடைத்து வைத்திருக்கின்றது என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர்.மேற்கத்திய உலகின் போலி சித்தாந்தத்தால் கவரப்பட்ட சில முஸ்லிம் பெயர்தாங்கிய பெண்கள்கூட, முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாத்தில் உரிமை இல்லை, அவற்றை நாம் போராடித்தான் பெற வேண்டும் என்று இயக்கம் கண்டு போலியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இஸ்லாத்தின் உண்மை நிலை அறியாத நமது சகோதரிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலர் இந்த விஷமப் பிரச்சாரத்தால் கவரப்பட்டு அதை நோக்கி செல்லவும் செய்கின்றனர்.
இஸ்லாம் உண்மையில் பெண்களுக்குவழங்கி இருக்கும் உரிமைகள் என்ன?
ஏனைய சமூகங்களைவிட இஸ்லாம் எந்த அளவுக்குபெண்களை கண்ணியப்படுத்துகின்றது என்பனவற்றை விளக்கிச் சொல்லிடவேண்டியது இஸ்லாமிய பெண்கள் அமைப்பின் தலையாயகடமை. இதை நிறைவேற்றிட வேண்டி இன்று தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்பினர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புதான், ஜம்மிய்யத்துன்னிஸா என்ற பெண்கள் அமைப்பு. இதில் நம் பெண்களையும் இணைத்துஉண்மையான பெண் விடுதலையை பெற்றுக்கொடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
நன்றி :திப்பு சுல்தான்
No comments:
Post a Comment