Sunday, March 23, 2008

ஹனுமான் சேனைக்கு குடும்பக் கட்டுப் பாடா ? அதிரப் போகுது R.S.S

தொல்லை தரும் குரங்குகள் : கு.க., செய்ய இமாச்சல் முடிவு

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில், ஒரு காலத்தில், சுற்றுலா பயணிகளை கவரும் அம்சமாக, வணங்குவதற்குரியவையாக கருதப்பட்டு வந்த குரங்குகள், தற்பாது பெரும் தொல்லையாக கருதப்படுகின்றன. குரங்குகள் இன விருத்தியை கட்டுப்படுத்த, அவற்றுக்கு கருத்தடை செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இமயமலை தொடரை ஒட்டியுள்ள இமாச்சல பிரதேசத்தில், கிராமம் முதல் நகரங்கள் வரை, எங்கு பார்த்தாலும், குரங்குகள் கூட்டம் இருக்கும். உள்ளூர் மக்கள் அவற்றை தெய்வமாக வணங்கி வருகின்றனர். அவற்றின் சேஷ்டைகள், சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து இழுக்கின்றன. சிம்லாவில், கசவ்லி மற்றும் ஜாகு கோயில் குரங்குகளின் கேந்திரமாக கருதப்படுகிறது. இந்த மாநிலத்தில், எட்டு லட்சம் குரங்குகள் உள்ளன.

குரங்குகள் எண்ணிக்கை பல்கி பெருகி விட்டது, அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பயிர்களை அழிப்பது, வீடுகளில் புகுந்து பொருட்களை துõக்கி செல்வது என குரங்குகள் தொல்லை அதிகரித்து விட்டது. இது குறித்து அம்மாநில முதல்வர் பிரேம் குமார் துமால் கூறியதாவது: சிம்லா, குலு, மணாலி போன்ற சுற்றுலா தலங்களில் உள்ள குரங்குகளை தொலை துõர இடங்களில், கொண்டு போய் விட்டு வருவது என, கடந்த காங்கிரஸ் அரசில் முடிவு செய்யப்பட்டது. இதுபோல, 4,500 குரங்குகள் அகற்றப்பட்டன. ஆனால், இந்த திட்டம் வெற்றி பெறவில்லை. மேலும், தஜிகிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு, குரங்குகளை ஏற்றுமதி செய்வது என்ற திட்டமும் வெற்றி பெறவில்லை. குரங்குகள் இன விருத்தியை கட்டுப்படுத்த, அவற்றுக்கு கருத்தடை செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. சிம்லாவில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தான், தற்போது இந்த வசதி உள்ளது. விரைவில், மாநிலத்தின் பல இடங்களில், இந்த வசதி கொண்ட, கால்நடை மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் துமால்(?) கூறினார்.

Thanks: DInamalar

No comments: