மதமாற்ற தடை சட்டம் ராஜஸ்தானில் அமல்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட் டுள்ளது. கட்டாய மதமாற்றத்தில், ஈடுபடுவோருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதமும், இரண்டு ஆண்டு முதல் ஐந்து ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
சட்டீஸ்கரில், 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை சட்டம், கவர்னரின் ஆட்சேபம் கார ணமாக கைவிடப்பட்டது. ம.பி.,யில் 2006ம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ராஜஸ்தானிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டள்ளது. சட்டசபையில் மசோதா கொண்டு வரப்பட்ட போது, எதிர்க்கட்சிகள் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தன. கடும் அமளிக்கு மத்தியில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு முன் கொண்டு வரப்பட்ட சட்டம் இரண்டு பிரிவுகளாக இருந்தது.
முதல் பிரிவு: மதம் மாறிய இந்துக்கள், மீண்டும் இந்து மதத்துக்கு திரும்ப அனுமதிக்கிறது.
இரண்டாவது பிரிவு : இந்து மதத்துக்கு மாறும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் மீண்டும் தங்கள் தாய் மதத்துக்கு திரும்ப முடியாது.
தற்போது, இரண்டாவது பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்துவாக மதம் மாறிய கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்கள் தாய் மதத்துக்கு மீண்டும் திரும்பலாம்.
நன்றி : தினமலர்
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பிற்கினிய சகோதரர்களே !அன்று Spain என்ற நாட்டில் இருந்து ஒட்டு மொத்த இஸ்லாம் சமுதாயமும் அடித்து அழித்து ஒழிக்கப் பட்ட சம்பவம் நாம் எல்லோரும் என்றும் மறக்க முடியாத ஒன்று.முடிவு அந்த நாட்டின் கடைசி முஸ்லீம் வரை அடித்து கொலை செய்யப் பட்டான் அல்லது விரட்டி அநாதை ஆக்கப் பட்டான்.அதற்கு அவர்கள் கையாண்ட வழி முறைகளில் ஒன்று தான் மத மாற்ற தடை சட்டம். இதன் மூலம் புதியதாக இஸ்லாத்தை நோக்கி வருபவர்களை தடுப்பதனால் இஸ்லாத்தின் வளர்சியை தடுக்கவும் இன்னும் இருக்கும் இஸ்லாமியர்களை கலவரங்கள் மூலமும் கற்பழிப்புகள் வழியகாவும் கொலை செய்து அழிப்பதன் மூலம் இருக்கும் எண்ணிக்கையையும் குறைத்து விட முடியும்.தொலை நோக்கு சிந்தனை உடைய வர்கள் இத்தனை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.இனிய சமுதாயமே.இத்தைய சம்பவங்களுக்கு நம்மால் முடிந்த மிகக் குறைந்த பட்ச எதிர்ப் பையாவது தெரிவிக்க முயலுங்கள்.இத்தைய சதிகளுக்கு பின்புலமாய் இருக்கும் பாசிச சக்திகளுக்கு இனியேனும் ஒரு பாடம் புகட்டுவோம். இவர்களை எதிர்க்கும் திராணியுள்ள இயக்கங்களில் இணைந்து இவர்களின் எல்லா சூழ்ச்சி களையும் முறியடிக்க ஒன்று படுவோம்.இந்தியா விற்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் பாடுபடுவோம்.
அன்புடன்
Imam ALi
Sunday, March 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment