Friday, March 28, 2008

துரோகம் இவர்களின் பிறவி குணம்


பாஜகவைத் துரத்தி வரும் கந்தகார்


புதுடில்லி, மார்ச் 28


அன்றைய அயல்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் தீவிரவாதிகளுடன் கந்தகார் சென்ற விஷயம் தனக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவு என்று பிரதமர் கனவில் மிதக்கும் பாஜக தலைவர் எல்.கே.அத்வானி அளித் துள்ள பேட்டி பாஜகவினரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி யுள்ளது.


1999ல் இந்தியன் ஏர் லைன்ஸ் விமானம் ஐசி 814 கந்தகார் கடத்தப்பட்டது. கடத் திச் சென்ற தீவிரவாதிகளின் மிரட்டலுக்குப் பணிந்த பாஜக தலைமையிலான கூட்டணி அரசு திகார் சிறையில் இருந்த தீவிரவாதிகளை விடுதலை செய்தது. அவர்களுக்கு பாது காவலனாக ஜஸ்வந்த்சிங் கந்தகார் சென்றார்.


தீவிரவாதிகளிடம் காங் கிரஸ் மென்மையாக நடந்து கொள்வதாக பாஜக குற்றம் சாட்டியவுடன் காங்கிரஸ் இந் நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி யது. அத்வானி தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியது பற்றி கருத்து தெரி விக்கையில் தேஜகூட்டணி யில் நடந்த நல்லவைகளுக்கு அத்வானியே காரணம் என்றும் தீயவைகளுக்கு வாஜ்பாய் தான் காரணம் என்றும் அத் வானி கூறுவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபி ஷேக் சிங் கூறினார்.


ஐந்தாண்டுகள் ஆட்சியிலிருந்த தேஜகூட்டணி ஆட்சியில் உள் துறை அமைச்சருக்கும் பிரத மருக்கும் இடையே உறவுகள் சுமூகமாக இருந்ததில்லை என்று அத்வானி மறைமுக மாக ஒப்புக் கொண்டுள்ளார் என்று பாஜகவினர் கருதுகின் றனர். பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கந்த காருக்கு ஜஸ்வந்த்சிங் செல் வது குறித்து விவாதிக்க வில்லை என்று அத்வானி உறுதிப்படக் கூறியுள்ளார்.


கந்தகார் பரிமாற்றத்தில் பணம் புழங்கவில்லை என்று அத்வானி கூறியதைக் கண்டு பாஜகவினரே வியப்புறுகின்ற னர். அத்வானியின் நேர் காணலை பாஜக செய்தித் தொடர்பாளர் மறுக்கவும் இல்லை, நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால், பாஜக வினர் மத்தியில் இது புயலைக் கிளப்பியுள்ளது. தேஜகூட் டணி ஆட்சியில் கந்தகார் என்ற களங்கத்தை இவ்வாறு அத்வானி அம்பலப்படுத்தியி ருக்க கூடாது என்று பாஜகவி னர் கூறுகிறார்கள்.


ஹோலி பண்டிகையின் போது சோனியாவை ஏன் அத்வானி சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி யை பாஜக தொண்டர்கள் எழுப்புகிறார்கள். ஐக்கிய முற் போக்கு கூட்டணிக்கு எதிரான வியூகங்களை உருவாக்கி வரும் சூழலில் இச்சந்திப்பு எதிர்மறைச் செய்தியைத் தரு வதாக அவர்கள் கூறுகின்றனர்.



நன்றி : தீக்கதிர்

No comments: