தேவ் பந்த் பிரகடனம்
இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான அவதூறு பிரச்சாரங்கள் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் முடுக்கி விடப் பட்டுள்ள சூழலில் இதமான தென்றலாக தெற்காசியாவிலேயே தொன்மையான வரலாற்று சிறப்பு, முதன்மையான அரபிக் கல்லூரி நிறுவனமான தாருல் உலூம் தேவ் பந்திலிருந்து வந்த செய்தி உள்ளது.
கடந்த பிப்ரவரி 25 அன்று அந்த பாரம்பரியம் மிக்க மதரசாவில் பயங்கரவாதத்திற்கு எதிராக மார்க்க அறிஞர்களின் மாபெரும் மாநாடு நடந்ததும் தேசிய அளவில் பல்வேறு மதரசாக்கலிருந்து 6000க்கும் மேற்ப்பட்ட உலமாப் பெருமக்கள் குவிந்தும் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த், ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் ,ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸ் போன்ற மக்கள் செல்வாக்கு மிக்க இயக்கங்களின் தலைவர்கள் திரண்டதும் பயங்கரவாததிர்க்கெதிரான அவதூறுகளை கண்டித்தும் முத்தாய்ப்பாக எழுச்சிமிகு பிரகடனத்தை வெளியிட்டதும் உலகையே திரும்பி பார்க்க செய்துள்ளது .
எல்ல விதமான அக்கிரமங்களையும் வன்முறைகளையும் பயங்கரவாதத்தயும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று அந்தப் பிரகடனம் உரத்து முழங்குகிறது. "எல்லா மனிதர்களுடனும் சமத்துவ உணர்வு மனித நேயம் இரக்கம் அன்பு கருணை சகிப்புத் தன்மை ,நலம் நாடுதல் , நீதியுணர்வு, ஆகியவற்றோடு பழக வேண்டும் என்றே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இஸ்லாம் எல்ல விதமான பயங்கர வாதத்திற்கும் எதிரானது. அக்கிரமம், மோசடி, குழஅப்பம் , கலவரம், கொலை, சூறையாடல்,அமைதியை குலைத்தல், பதற்றத்தை உண்டுபன்னுதல் ஆகியவற்றை மிகப் பெரும் குற்றமாக இஸ்லாம் கண்டிக்கின்றது" என பிரகடனத்தில் திட்ட வட்டமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
தேவ் பந்த் பிரகடனத்தில் சொல்லப் பட்டுள்ளது புதிய செய்தி அல்லதான். என்றாலும் அச்சு மின்னணு ஊடகங்களிலும் , அரசியல் வட்டாரங்களிலும் இந்தப் பிரகடனம் ஏற்ப்படுத்தி உள்ள நல்ல தாக்கங்களைப் பார்க்கும் போது மனம் நிம்மதி அடைகின்றது. முஸ்லிம்களை சுற்றி மண்டிக் கிடக்கின்ற சந்தேகம் ,துவேசம் ஆகி ய பனி மூட்டங்கள் விலகுவதற்கு இந்தப் பிரகடனம் துணை நிற்கும் என்கிற எதிர் பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது .இஸ்லாத்தின் பெயரில் சில வழி கேட்டுப் போன இளைஞர்கள் செய்கின்ற செயல்களால் இஸ்லாத்திற்கு ஏற்ப்பட்டுள்ள அவப் பெயர் களைவதற்கும் அது துணை போகும் .
அதே சமயம் இங்கு சில கேள்விகள் எழுகின்றன
எது பயங்கர வாதம் ? வழிகெட்டுப் போன சில முஸ்லீம்கள் செய்வது மட்டும் தான் பயங்கர வாதமா? இந்த நாட்டின் தந்தையாக போற்றப் படும் காந்தியடிகள் படுகொலை செய்யப் பட்டது பயங்கர வாதம் இல்லையா ? குஜராத்தில் பச்சிளம் குழந்தைகளை எரிகிற நெருப்பில் தூக்கி வீசப் பட்டதும் குடும்பப் பெண்களின் மானம் சூறையாடப் பட்டதும் நிராயுத பாணியாக நின்ற முஸ்லீம் கள் உயிரோடு எரிக்கப் பட்டதும் பயங்கர வாதம் இலையா?
அத்வானியும் ஜோஷியும் உமா பாரதியும் பட்டப் பாலில் பாபரி மஸ்ஜிதை இடித்தது பயங்கர வாதம் இல்லையா?
இன்று வரை பத்து இலட்சம் ஈராக்கியர்களைக் கொன்று குவித்துள்ள அமெரிக்க பயங்கரவாத நாடு இல்லையா?
பாலஸ்தீனைர்கள் மீது அன்றாடம் அக்கிர மங்களை கட்டவிழ்த்து விடுகின்ற இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பது பயங்கர வாதம் இல்லையா?
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரை ஆயிரக் கணக்கானோர் வகுப்பு வாத வெறியர்களால் கொல்லப் பட்டுள்ளார்கள் என்றாலும் இன்று வரை ஒரே ஒரு வெறியனாவது தூக்கிலிடப் பட்டுஇருக் கின்றாரா?
ஸ்ரீகிருஷ்னா ஆணையம் உட்பட எத்தனையோ விசாரணை ஆனயங்களால் சுட்டிக் காட்டப் பட்டும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப் படாமல் இருப்பது பயங்கரவாதத்திற்கு துணைப் போவது ஆகாதா?
சொந்த அலுவலகங்களில் குண்டு வைத்து கலவரத்தை ஏற்ப்படுத்த திட்டமிட்ட தென்காசி இளைஞர்கள் பயங்கர வாதிகள் இல்லையா?
ஆளுக்கொரு நீதி என்கிற ஆநீதியான நடை முறையும் நயவஞ்சகாத்தனமும் இரட்டை அணுகுமுறையும் முற்றாக ஒழிக்கப் படுகின்ற நாள் என்னாளோ? அந்நாள் தான் இந்நாட்டின் உண்மையான விடுதலை நாள் ......!
நன்றி : சமரசம் மற்றும் இதனை பதிய சொல்லி வலியுறுத்திய நண்பருக்கும்
No comments:
Post a Comment