கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் நேர்காணல் :-தீக்கதிர் பக்கத்திலிருந்து
கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு 2006 மே மாதம் ஆட்சிக்கு வந்தபின் இந்த இரண்டாண்டு காலத்தில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி யிருக்கிறீர்கள். அவற்றில் மிக முக்கிய மானவையாக நீங்கள் கருதுகிற நடவடிக் கைகள் எவை?
விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்தியதும், மூடப்பட்ட பல பொதுத் துறை நிறுவனங்களை மறுபடி இயங்கச் செய்த தும், மீனவர்கள் உள்பட பெரும்பகுதி மக்களை கந்துவட்டிக்காரர்கள் பிடியிலிருந்து மீட்டதும், கல்வித்துறையை தனியாரிடமிருந்து மீட்டு சமூகநீதியை நிலைநாட்டியதும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் என்று சொல்லலாம். எல்டிஎப் ஆட்சிக்கு வந்த போது, விவசாயம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது. ஆயிரத்துக் கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்தி ருந்தார்கள். நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் வேலையாக, அந்த ஆயிரம் விவசாயி களின் குடும்பங்கள் அரசுக்குச் செலுத்தவேண் டியிருந்த கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்தோம். மற்ற விவசாயிகள் கடனைத் திருப் பிச் செலுத்த ஓராண்டு கால நீட்டிப்பு அறிவித்தோம்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் அரசு, விவசாயத் தொழிலாளர்களுக் கான ஓய்வூதியத் தொகையை 26 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்தது. விவசாய நெருக்கடி யால் அவர்களது குடும்பங்களும் வேலையி ழந்து தவித்த நிலையில் அந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.1050 வீதம் அந்தத் தொகையை உடனடியாக வழங்கினோம். உடன டியாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கடன் நிவாரணக் குழு ஒன்று அமைத்தோம். நிலைமைகளை ஆராய்ந்த அந்தக் குழு முதல் நடவடிக்கையாக, 25,000 ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யப் பரிந்துரைத்தது. வேறு பல பரிந்துரைகளையும் அந்தக் குழு வழங்கியது. அமைச்சரவை கூடி உடனடியாக அந்தப் பரிந்துரைகளைச் செயல் படுத்த முடிவெடுத்தோம், செயல்படுத்தினோம்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் யுடிஎப் ஆட்சியில் கிலோ ரூ.7 விலையில்தான் கொள்முதல் செய்யப்பட்டுவந்தது. எல்டிஎப் அரசு அதை இப்போது 10 ரூபாயாக உயர்த்தி யிருக்கிறது. இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் விவசாயிகள் தற்கொலை முற்றிலுமாக நின் றது. சாகுபடி செய்யாமல் போடப்பட்டிருந்த நிலங்களில் மறுபடியும் பயிர்கள் விளையத் தொடங்கின.
யுடிஎப் ஆட்சியின்போது லாபகரமாக இல் லை என்று சொல்லி மூடப்பட்ட பல பொதுத் துறை நிறுவனங்களை மறுபடியும் திறக்க வலி யுறுத்திப் போராடிவந்தோம். எல்டிஎப் அரசு தனது அடுத்த முக்கிய நடவடிக்கையாக அந் தத் தொழிற்சாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுத்தது. அவற்றைச் சார்ந்திருந்த தொழிலா ளர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்தது. அவ் வாறு திறக்கப்பட்ட பின், 24 நிறுவனங்கள் இப் போது லாபகரமாக இயங்குவதாகத் தணிக்கை அறிக்கைகள் காட்டுகின்றன.
கல்வியைப் பொறுத்தவரையில் அது தனி யாரின் வேட்டை நிலமாக மாற்றப்பட்டிருந்தது. கல்விக்கட்டணங்கள் ஏழை, எளிய குடும்பங் களைச் சேர்ந்த மாணவர்களால் கனவுகூட காணமுடியாத அளவுக்கு மிகக் கடுமையாக இருந்தன. எங்கள் அரசு கல்விக்கான சட்ட முன்வரைவு ஒன்றை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தது. அமைச்சர்கள் கல்லூரி நிர்வாகங்களோடு பேசினார்கள். இன்று, ஏழை மாணவர்கள், தலித் மாணவர்கள், பிற் படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாண வர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு உறுதிப்படுத் தப்பட்டிருக்கிறது. கல்வித்துறையில் சமூக நீதி யும், தகுதியும் இணைந்து நடைபோடச் செய்தி ருக்கிறோம். இப்படிப்பட்ட திட்டவட்டமான நடவடிக்கைகளால் பெரும்பான்மை மக்கள் அதாவது ஏழை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
புதிய வேலை வாய்ப்புகள் எந்த அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளன? நில விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளனவா?
புதிய தொழில்கள் தொடங்குவதற்கான வளமான, எளிதான வாய்ப்புகளை அரசு உரு வாக்கிக் கொடுக்கிறது. இன்றைய நவீன தக வல் தொழில்நுட்பத் துறை சார்ந்த தொழில் களும் நிறைய தொடங்கப்பட்டுள்ளன. இத னால், தகவல் தொழில்நுட்பம் பயின்ற பல்லா யிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் கிடைக்கச் செய்வது என்பது ஒரு முக்கியமான கொள்கை. முந்தைய ஆட்சியில் லட்சக் கணக் கான அரசு நிலங்களை பன்னாட்டு நிறுவனங்க ளும், ரியல் எஸ்டேட் கொள்ளை நிறுவனங் களும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தன. அந்த நிலங்களை அவர்களிடமிருந்து மீட்பது என்று முடிவு செய்தோம். இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் மட்டுமே கிட்டத்தட்ட 12,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டோம். அது பெரிய சர்ச்சையானதும், அரசு உறுதியான நிலையை மேற்கொண்டதும் ஊட கங்கள் வாயிலாகத் தெரிந்து வைத்திருப்பீர்கள். இதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந் தது 3,000 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியிருக் கிறோம். இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் விரைவில் தலித் மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் மற்றவர் களுக்கும் மறுவிநியோகம் செய்யப்பட உள் ளன. அதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட் டுள்ளன.
“விமோசன சமரம்” என்ற பெயரில் முன்பு இ.எம்.எஸ். அரசுக்கு எதிரான ஒரு கலவ ரத்தை நடத்திய காங்கிரஸ் கட்சி இப்போ தும் அதேபோல் அறிவித்திருக்கிறதே?
எல்டிஎப் அரசின் நடவடிக்கைகளை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் ஒப்புக் கொள்கிறது என்பதுதான் இதன் பொருள். இப்போது கேரளத்தின் நெல் வயல்களில் அறு வடைக் காலம். எதிர்பாராமல் பெய்த மழையால் வயல்கள் நீரில் மூழ்கி பயிர்கள் பாழாகிவிட்டன. விவசாயிகள் துயரத்திற்கு உள்ளாகியிருக்கி றார்கள். அரசும் துயர்துடைப்புப் பணிகளைத் துவக்கியிருக்கிறது.
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் இதில்கூட அரசியல் ஆதாயம் பெற முடியுமா என்று பார்க் கிறார்கள். அரசு எதுவுமே செய்யவில்லை என்ற அவதூறுப்பிரச்சாரத்தைத் துவக்கியிருக்கிறார் கள். அதற்கு விமோசன சமரம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய இந்த முயற்சிக்குப் பின்னால், முந்தைய ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட பிரச்சனைகளில் எல்டிஎப் அரசின் பல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் கார ணமாக மக்களிடையே தாங்கள் தனிமைப் பட்டுப்போய்விடுவோம், எல்டிஎப் மேலும் செல் வாக்குப் பெற்றுவிடும் என்ற கலக்கமும் இருக்கிறது. உதாரணமாக, முறைசாராத் தொழி லாளர்களின் கோரிக்கைகளை யுடிஎப் அரசு பொருட்படுத்தியதே இல்லை. நாங்கள் அவர் களது குறைந்தபட்சக் கூலியை உறுதிப்படுத் தும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம். கடைகளில் ஒரு நாளில் 13, 14 மணிநேரம் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் உள்பட சுமார் 10 லட்சம் பேருக்கு குறைந்தபட்சக் கூலி உத்தரவாதமாகியிருக்கிறது.
இந்த ‘விமோசன சமர வீரர்கள்’ தங்களு டைய குறுகிய அரசியல் நோக்கங்கள் காரண மாக, பல இடங்களில் மதவாத சக்திகளுடனும் கூட சேர்ந்துகொள்கிறார்கள். ஆனால் இதை யெல்லாம் எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இதர எல்டிஎப் கட்சிகளும் தயாராக இருக்கிறோம்.
கண்ணூர் மாவட்டத்தில் மதவெறி சக்திகளால் பிரச்சனையும் வெடித்திருக்கிறது. தலைநகர் டில்லியிலும் மற்ற இடங்களிலும் ஆர்எஸ்எஸ் தலைமையில் மதவெறி சக்தி கள் வன்முறைகளை நிகழ்த்தியிருக்கிறார் கள். இதன் பின்னணி என்ன?
கேரள மண்ணை மதவெறிமயமாக்கும் ஆர்எஸ்எஸ் திட்டமும், அதை நிறைவேற்ற முடியவில்லை என்ற ஆத்திரமும்தான் அடிப் படையான பின்னணி. மார்க்சிஸ்ட் கட்சிக்கு மக் களிடையே உள்ள தாக்கம் அவர்களை விரக்தி யடைய வைக்கிறது. அந்த விரக்தியால், உள் ளூர் வட்டாரங்களில் தங்களது நோக்கத்திற் குத் தடையாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களைத் தாக்குகிறார்கள். ஆத்திர மூட்டும் செயல்களால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது போன்ற தோற்றத் தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் முயல்கிறது. இப்ப டிப்பட்ட முயற்சிகளின் தொடர்ச்சியாகவே கண் ணூர் மாவட்டத்தில் திடீர் வன்முறை மோதல் கள் ஏற்பட்டன. வன்முறையில் 11பேர் கொல்லப் பட்டார்கள்.
முதலமைச்சர் என்ற முறையில் நான் உட னடியாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டினேன். மாவட்டத்தில் அமைதியை நிலை நாட்ட ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத் தேன். சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. இப்படி அரசு மட்டத் திலும் அரசியல் மட்டத்திலும் மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் காரணமாக, முன்பு தொடர் கதையாக இருந்துவந்த வன்முறை தற்போது விரைவாக முடிவுக்கு வந்தது.
நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அரசு பொறுப்பேற்ற முதல் மாநிலம் கேரளம் தான். நாட்டின் அரசியலில் கேரளத்தின் பங்களிப்பு பற்றிக் கூறுங்கள்...
முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்புக்கு உள்ளேயே எப்படி அதிகபட்ச நன்மைகள் மக் களுக்குக் கிடைக்கச் செய்ய முடியும் என்பதை முதலில் எடுத்துக்காட்டியது கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி அரசுதான். இன்று மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் சேர்ந்து மத்திய ஆட்சியாளர் களுக்கும் மற்றைய மாநிலங்களின் ஆட்சியா ளர்களுக்கும், மக்களைத் தாக்கும் உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளுக்கு மாறாக மக்களைக் காக்கும் மாற்றுக் கொள்கை களைச் செயல்படுத்துவது எப்படி என்ற முன்னு தாரணமாகத் திகழ்கின்றன. கடுமையான அர சியல், பொருளாதார பிரச்சனைகளில் இந்த மூன்று மாநிலங்களின் இடதுசாரி அரசுகள் எப் போதும் மக்களின் பக்கமே நின்றுவந்துள்ளன. தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோர் பக்கமே நின்று வந்துள்ளன. மதச்சார்பின்மை என்பது இந்த மூன்று மாநிலங்களிலும் வலுப் படுத்தப்பட்டுள்ளது.
நன்றி : தொகுத்து அனுப்பி பதிய சொன்ன நண்பர் அன்சாரி அவர்களுக்கு
Thursday, April 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment