Thursday, May 8, 2008

மீண்டும் பிரச்சனையை கிளப்பும் டென்மார்க் பத்திரிகைகள்


டேனிஸ் மக்கள் கட்சியை கண்டித்து 26 தலைவர்கள் பகிரங்கக் கடிதம் !
முகமது (நபி) கேலிச்சித்திர விவகாரத்தின் பின்னர் தற்போது டென்மார்க்கில் டேனிஸ் மக்கள் கட்சி வெளியிட்ட புதிய விளம்பரப் புகைப்படம் இன்னொரு சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. இஸ்லாமிய பெண்மணி ஒருவர் முகத்தை மூடி பர்தா ஆடை அணிந்து டேனிஸ் நீதிமன்ற இருக்கையில் இருந்தபடி எமது டென்மார்க்கை திருப்பித்தா என்று கேட்பதுபோல வெளியிட்ட புகைப்படமே இந்த சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.
டேனிஸ் அடிப்படை அரசியல் விசயங்களில் முக்கியமானது நீதித்துறை, அதை அவமதிப்பதுபோல டேனிஸ் மக்கள் கட்சி வெளியிட்டுள்ள புகைப்படமானது மிகவும் கீழ்த்தரமான கேவலமான செயல் என்று கொன்ஸ்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ரொம் எப்கன்சன் தெரிவித்தார்.
டேனிஸ் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவி கெலதொனிங் போன்ற தலைவர்கள் ஏற்கெனவே இது குறித்து கருத்து கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முக்கிய டேனிஸ் பிரமுகர்களும் களமிறங்கியுள்ளதால் விவகாரம் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. முன்னாள் வென்ஸ்ர கட்சித் தலைவரும், வெளிநாட்டு அமைச்சருமான எலமன் ஜென்சன், பிரபல எழுத்தாளர் பெனி ஆனர்சன், முன்னாள் தேசிய வங்கித் தலைவர் எரிக் கூப்மேயர் உள்ளிட்ட 26 பிரபலங்கள் டேனிஸ் மக்கள் கட்சியின் செயலைக் கண்டித்து பகிரங்கக் கடிதம் வெளியிட்டுள்ளனர். டேனிஸ் மக்கள் கட்சியின் விளம்பரப்படம் டேனிஸ் மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான நீதித்துறையை கேவலப்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ளனர்.
இது குறித்து கருத்துரைத்த டேனிஸ் மக்கள் கட்சித் தலைவர் பியா கியாஸ்கோ 26 முன்னாள் தலைவர்களின் கண்டன அறிக்கையானது டென்மார்க்கில் உள்நாட்டு பிரச்சனைகளை விளைவிக்கும் எனபது போல தெரிவித்தார். இந்த விஷயத்தில் டென்மார்க் பிரதமர் ஆனஸ்போ ராஸ்முசன் நிலைப்பாடு அவருடைய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் பதவிக்கு மிதப் பெரிய இடையூறை விளைவிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
டென்மார்க்கில் முன்னர் வெளியான முகமுது (நபி) அவர்களின் கேலிச்சித்திரங்கள் டென்மார்க்கிற்கும் இதர இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியிருந்தது.இதன் மூலம் டென்மார்க் ஒரு மிகப் பெரிய பொருளாதார இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்போது வெளியாகியிருக்கும் படம் டேனிஸ் நீதித்துறைக்குள்ளேயே மூக்கை நுழைந்துள்ளது. வரும் நாட்களில் இந்த விவகாரம் டென்மார்க் அரசியல் வட்டாரத்தில் ஒரு மிகப் பெரிய பிரச்சனையை கிளப்ப இருப்பது தெரிய வருகிறது.
ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி கடைசில மனுசன கடிச்ச கதையா இருக்குதுன்னு சொல்றது போல அன்னைக்கு ந்த பத்த்ரிகைகள் இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான முகம்மது நபி அவர்களை கேலி செய்யும் விதத்தில் சித்திரங்களை இட்டபோடே அதனை கண்டித்து இருந்தால் இன்று ஆட்சிக்கே ஆப்பு வர்ற சூழ்நிலை வந்து இருக்காது. இனியேனும் டென்மார்க் அரசாங்கம் விழித்துக் கொள்ளுமா?

2 comments:

Anonymous said...

Nice Post !
Use a Tamil social bookmarking widget like PrachaarThis to let your users easily bookmark your blog posts.

Irai Adimai said...

Thanks for u advice