புஷ் மூத்த மகள் திருமணம்-காதலனை மணக்கிறார்
அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்ஷின் மூத்த மகள் ஜென்னாவுக்கு வரும் 10ம் தேதி திருமணம் நடக்கிறது. காதலனையே கைபிடிக்கிறார் ஜென்னா. அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மூத்த மகள் ஜென்னாவுக்கும் ஹென்றி ஹேகர் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கேம்ப்டேவிட் ஓய்விடத்தில் அதிபர் புஷ் தனது மனைவி லாராவுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது ஹென்றி ஹேகர் நேரில் சென்று ஜென்னாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறினார்.
வழக்கமான தந்தைகள் போல அப்போதைக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தார் புஷ். பின்னர் மகள் ஜென்னாவின் கருத்தை அறிந்து காதலுக்குப் பச்சைக் கொடி காட்டினார். திருமண ஏற்பாடுகளையும் செய்தார்.
வருகிற சனிக்கிழமை (10ம் தேதி) அன்று டெக்சாஸ் நகரில் கிராஃபோர்டு என்ற இடத்தில் உள்ள மிகப் பெரிய பண்ணை வீட்டில் இந்த திருமணம் விமரிசையாக நடைபெறுகிறது. இதற்காக அந்த பண்ணை வீடு விழாக் கோலம் பூண்டுள்ளது.
திருமணத்தின்போது மணமகள் ஜென்னா, ஆஸ்கார் டி லா ரென்டா கவுன் அணிய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முக்கியமான உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே இரவு விருந்து மற்றும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
மணமகளுக்கு தோழிகளாக 14 பேர் இடம் பெறுகிறார்கள். அவர்களில் ஜென்னாவின் தங்கை பார்பரா புஷ்ஷும் ஒருவர். திருமண மோதிரத்தை தேர்ந்தெடுக்க ஹேகருக்கு ரொம்ப உதவியாக இருந்தாராம் 'நாத்தனார்' பார்பரா.
அந்த மோதிரத்தில் ஹேகர் குடும்பத்தின் பரம்பரை வைரக்கல்லுடன் நீலக்கற்களும் இடம்பெற்றுள்ளன.
நன்றி : தட்ஸ் தமிழ்
Thursday, May 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இந்த திருமணத்தில் விருந்து ஒரு வேளை இப்படி இருக்கும்
தலிபாநிஸ் வறுவல்
இராக்கீஸ் ப்ளூட் ஜூஸ்
பலஸ்தீன் சில்ட்றேன்ஸ் கபாப்
இன்னும் அப்பவிமுச்ளிம்களின் உயிர்களும் உடலாலும் செய்யப் பட்ட எல்லா உணவுகளும்
இப்படி கூட இருக்கலாம்
Post a Comment