முண்டே பி ஜே பி கூட சண்டே (சண்டை)
பாஜ கட்சி ஜனநாயக முறையில் செயல்படவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோபிநாத் முண்டே கூறி யுள்ளார். கட்சியின் பொதுச் செய லாளராக இருந்த அவர், அனைத்துப் பொறுப்புகளி லிருந்தும் விலகிக் கொள்வ தாக அறிவித்துள்ளார். திங்களன்று மும்பை வந்த அவர், பாஜகவில் ஜனநாயகம் கொஞ்சம் கூட இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே பதவி விலகிய தாக கூறினார்.
வடிவேலு ஸ்டைல் ல சொன்ன அது அப்போ...
ஆனா இப்போ பாஜகவில் இருந்து விலகப் போவது இல்லைன்னு சொல்லிஇருக்கிறார். இவரு எல்லாம் ஒரு பெரிய மனுசன்னு சொல்லி நம்பி பதினாறு பேரு ராஜினாமா கூட செய்தாங்கோ .இப்போ வழக்கம் போல அவுங்களுக்கும் சேர்த்து சங்கு ஊதிப் புட்டாங்கோ...
நம்பினோரை நட்டாத்தில் விடும் பி ஜே பி
{16 பிஜேபி கவுன்சிலர்கள் விலகல் புதுதில்லி
ஏப்-21. பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலர் பதவி யிலிருந்து விலகிய கோபிநாத் முண்டேக்கு ஆதரவு தெரிவிக்கும் வந கயில் புனே மாநகராட்சியைச் சேர்ந்த 16 பிஜேபி கவுன்சிலர்கள் பதவி விலகிவிட்டனர். அவர்கள் தங்களது பதவி விலகல் கடிதங்களை கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் மும்பை கிளைக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது தொடர்ப க தனது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் கோபிநாத் முண்டே கட்சியின் எல்லா பதவிகளிலிருந்தும் விலகிவிட்டார். பாரதிய ஜனதா கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.}
நம்புவதற்கு கூட ஒரு தகுதி வேண்டும் என்று பட்டு தெரிந்து கொண்ட அந்தப் பதினாறு பேருக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
2 comments:
குழப்பமான தலைப்பா இருந்தாலும் கொஞ்சம் உள் குத்து இருக்கு.தலைப்புக்கள் எல்லாமே சூப்பர். தொடர்ந்து கலக்குங்கோ ...............
நன்றி ! உள் குத்தோ வெளிக் குத்தோ விஷயம் விளங்க வேண்டியவங்களுக்கு விளங்கிட்டாப் போதும் என்ன நான் சொல்லுறது சரிதானே
Post a Comment