Monday, May 19, 2008

இஸ்லாமியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாட தடையா ?

இந்த சுதந்திர இந்தியாவில் இன்றைய கால சூழலில் இஸ்லாமியர்கள் பலவாறாக அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப் படுவதும் இனக்கலவரங்களின் மூலம் கூட்டம் கூடமாக அழித்து ஒழிக்கப் படுவதும் இன்று அன்றாடம் வாடிக்கை ஆகிவிட்ட சூலில் இந்த இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிர வாதிகள் என்று ஒரு போலியான வாதம் உளவியல் ரீதியாக மக்கள் மனதில் பதிக்கப் படுகிறது.ஆனால் இந்த இஸ்லாமியர்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு செய்த தியாகங்கள் ஏராளம் ஏராளம்.ஆனால் காந்தியை கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு படுகொலை செய்த கூட்டங்கள் இன்று அந்த தியாகங்களை அப்படியே அநியாயமாக திருடி சென்று விட முயற்சிக்கின்றனர். இன்னும் இந்த துரோகிகள் இவர்களை தியாகி களாக காட்டவும் முயற்சிகின்றனர். அதன் வெளிப் பாடு தான் இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்களின் மீதும் இவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி.இது இன்று முத்திப் போய் இஸ்லாமியர்களின் தியாகங்கள் எங்கே வெளிப் பட்டு விடுமோ என்ற பயத்தில் அவர்களின் எல்லா முயற்சிகளையும் முறியடிக்க இவர்கள் காட்டும் ஆர்வம் உண்மைப் படுத்துகிறது.

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் சுதந்திரத்தை அதன் சொந்தக் காரர்களை கண்ணியப் படுத்தும் விதமாக அந்த தினத்தன்று அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஓட்டுவது தேசிய கோடி ஏற்றுவது அணிவகுப்புகளை நடத்துவது போன்ற செயல்கள் நடைபெறுவது வழக்கம்.இது உலக நடப்புகளை அறியும் ஆர்வம் உடைய பகுத்தறிவாளர்கள் அறிந்த ஒன்று தான்.
இன்று இதற்க்காக நடத்தப் படும் ஒத்திகைகள் சில வேலை வெட்டி இல்லாத போலிகளின் விளையாட்டு தனத்தால் இரகசிய தகவல்கள் என்ற பெயரில் யூகங்களையும் வதந்திகளையும் பரப்பும் பொருட்டு காவல துறைக்கு அளிக்கப் படுகிறது.கிடைத்த தகவலை சரி பார்க்க வேண்டி அவர்களும் இந்த அலை களிப்புக்கு ஆளாவது தவிர்க்க முடியாதா ஒன்றாகி விட்டது .
உதாரணமாக



பள்ளியில் இளைஞர்களுக்கு பயிற்சியா? மேலப்பாளையத்தில் போலீசார் கண்காணிப்பு



திருநெல்வேலி : மேலப்பாளையம் பள்ளியில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலால், போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினார். ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பை அடுத்து, சென்னையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நெல்லையைச் சேர்ந்த ஹீரா (26) என்பவர் உட்பட மூன்று தீவிரவாதிகள் பிடிபட்டனர். இவர்களது கூட்டாளிகளான தஞ்சை அதிராமபட்டினம் தவுபீக், சென்னை அபுதாகீர் ஆகியோர் தப்பியோடி விட்டனர். இவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களுடன் தொடர்புடையவர்கள் நெல்லை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் உதவியுடன் தேடப்படும் தீவிரவாதிகள் கேரளா செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, நெல்லை சரக டி.ஐ.ஜி., கண்ணப்பன் உத்தரவின் பேரில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எஸ்.பி., தினகரன் மேற்பார்வையில் நெல்லை மாவட்டம் முழுதும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.


இந்நிலையில், மேலப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து, அந்த பள்ளி நிர்வாகிகளை போலீசார் அழைத்து விசாரித்தனர். "சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைக்கான பயிற்சி தான் அளிக்கிறோம், வேறு எந்த பயிற்சியும் அளிக்கவில்லை என போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். ஆனால், அந்த ஒத்திகையில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை எனவும், இளைஞர்கள் கலந்து கொண்டதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று காலை இளைஞர்களுக்கான அணிவகுப்பு பயிற்சி நடத்தப்பட இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பயிற்சி நடத்த அனுமதி கேட்டும் அவர்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பள்ளியில் அணிவகுப்பு பயிற்சி நடத்த போலீசார் தடை விதித்தனர். இதனால் பயிற்சி ஏதும் நடைபெறவில்லை. இருப்பினும் விளையாட்டு பயிற்சிக்காக பலர் பள்ளி மைதானத்திற்கு வந்திருந்தனர். அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.


நன்றி : தினமலர்


இந்த செய்தியில்
பயிற்சி நடத்த அனுமதி கேட்டும் அவர்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது
என்று அவர்களே ஒத்துக்க் கொண்ட பிறக்கும் இதனை ஒரு பெரிய சதி செயலைப் போல போலியாக திரித்து கூறுவது இவர்களின் காவல்துறையின் போக்கை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கையே தெரிவிக்கிறது.

இதில் பரிதாபத்திற்குரிய நிலை துறைக்கு தான்.இன்றைய கால சூழலில் எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மக்களை காப்பாற்றி வரும் இவர்களின் தியாகங்கள் பல பல. ஆனால் இத்தகைய போலி களின் திசை திருப்பும் நோக்கிற்கு இரையாவதன் மூலம் இன்னும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வருகிறது.
எனவே இனி வரு காலங்களில் கண்ணியத்திற்குரிய காவல் துறை இது போல இடையூறு செய்யும் வேலை வெட்டி இல்லாத போலி களை இனம் கண்டு பகிரங்கமாக தண்டிக்கவேண்டும்.அதன் மூலம் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று உண்மையான பாசத்தோடு கோரிக்கை வைக்கிறேன்.பத்திரிகைகளும் இது போன்ற ஒன்றுக்கும் உதவாத வீணான விசயங்களை பிரசுரித்து இத்தகைய போலிகளை ஊக்குவித்து தங்களின் தரத்தை தாழ்த்திக் கொள்வதை விட்டு விட்டு அந்த இடங்களில் மக்களுக்கு உதவும் எதாவது தகவல் களை அதிகமாக பிரசுரிப்பத்தின் மூலம் நாங்கள் கொடுக்கு காசுக்கு உண்மையான உறுதியான தகவல் களை தந்ததிருப்தியை யாவது எங்களுக்கு தர முயற்சிக்கலாம்.வாசகர்களுக்கு மதிப்பு கொடுக்கும் பத்திரிகை கள் இனி வரும் காலங்களில் இதனை செயல் படுத்தும் என்று நம்பிக்கை கொள்கிறோம் .

அன்புடன் : இறை அடிமை

No comments: