Saturday, May 24, 2008

எட்டப்பன் ஆகிடுங்க கெட்டப்ப மாத்திடுங்க - அமெரிக்காவின் புதிய அதிரடி


விலைவாசியை சமாளிக்கணுமா? காட்டிக்கொடுக்க கைகொடுக்குது புது வழி
நியூயார்க் : விலைவாசியை சமாளிக்க முடியலியா, கரன்ட் பில், போன் பில் கட்ட பணமில்லையா, கவலையே வேண்டாம்! காட்டிக்கொடுத்தால் போதும்; கைநிறைய காசு ஓசைப்படாமல் வங்கிக்கணக்கில் சேரும்!-
அமெரிக்கர்களுக்கு இப்படி ஒரு புதுமையான வழி தான் இப்போது கைகொடுக்கிறது.குற்றங்களை தடுக்க அமெரிக்க போலீஸ் துறை பல வழிகளை கையாள்கிறது. அதில் ஒன்று, "கிரைம் டிப்ஸ்டர்ஸ் ஹாட் லைன்' திட்டம்.

குற்றவாளி பற்றி துப்பு கிடைத் தால், குற்றம் நடப்பதை அறிந்தால், இந்த போன் எண்ணில் தகவலை பதிவு செய்து பெயர், முகவரியையும் அளிக்க வேண்டும்.தகவலின் படி, போலீசார் விசாரித்து குற்றவாளியை பிடித்தாலோ, குற்றத்தை தடுத்தா லோ, உங்கள் வங்கிக்கணக்கில் வெகுமதி தொகை சேர்க்கப்பட்டு விடும். குற்றவாளிகளை காட்டிக்கொடுப் போரை பாதுகாக்க இப்படி வெகு ரகசிய வழியை அமெரிக்க போலீஸ் கடைபிடித்து வருகிறது.வழக்கமாக இந்த போன் எண்ணுக்கு குறைவாக தான் அழைப்பு வரும். ஆனால், கடந்த ஆறு மாதமாக அதிக அளவில் போன் அழைப்புகள் வருகின்றன. குற்றவாளிகளை பற்றி , குற்றத்தை அறிந்தது பற்றி தகவல் அளித்து பணம் பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதனால், போலீசுக்கு தலைவலி தந்து வந்த பல முக்கிய குற்றங்களில் கூட துப்பு கிடைத்து வருகிறது.

திடீரென "காட்டிக்கொடுப்போர்' எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணம் பற்றி அதிகாரிகள் கூறுகையில்,"விலைவாசி பல மடங்கு அதிகரித்து விட்டது. சாதாரண சம்பளம் பெறுவோர், குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். அதனால்தான், போன் செய்து குற்றம் சம்பந்தப்பட்ட தகவல்களை அளிக்கின்றனர். எங்களை பொறுத்தவரை, பல இடங்களில் குற்றங்கள் குறைந்து வருகின்றன என்ற திருப்தி இருக்கிறது' என்றனர். குற்றம் தொடர்பான தகவலுக்கு இரண்டாயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் வரை வெகுமதி தரப்படுகிறது. முக்கிய குற்றவாளி பிடிபட காரணமான தகவல் என்றால், அதற்கு கூடுதல் வெகுமதி தரப்படுகிறது.

No comments: