Sunday, March 8, 2009

இவர் பிரதமரானால் அத்வானியை பற்றிக் கொண்ட பயம்

இன்று பொருளாதார நெருக்கடியில் உலகமே சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் பொது இந்தியாவிலேயே அதிவேகமாக முன்னேறும் மாநிலம் என்று குஜராத் மாநிலமும் இந்தியாவின் பிரதமராக முழுமையான தகுதி வாய்ந்த நபர் என்று குஜராத கலவர புகழ் நரபலி நரேந்திர மோடி என்றும் இன்று ஒரு போலி மாயை சில கார்பரேட் முதலாளிகளால் உருவாக்கப் படுகிறது.

இது பிற சமூகங்களையும் ஏழை எளிய அப்பாவி பொது ஜனங்களையும் பீதி வயப் படுத்தியதை விட அதிகம் அதிகமாக அடிவரை சென்று தாக்கியது அத்வானியையும் தான்.
இத்தனை வருட கஷ்டத்திற்குப் பிறகு இனி வரும் காலத்திலாவது ஒரு முறையேனும் இந்தியாவின் பிரதமராக ஆகி தன்னுடைய நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று சப்புக் கொட்டி காத்திருந்தவருக்கு இப்படி ஒரு ஆப்பு வரும் என்று கனவிலும் எதிர் பார்த்திருக்க வில்லை.இப்போதைய சூழலில் மோடி என்ற பெயர் சிறுபான்மை மக்களுக்கு மட்டும் அல்ல அத்வானிக்கும் "பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல" எனபது போல ஆயிற்று.

நிலைமை இப்படி இருக்க அல்ட்ரா மாடர்ன் முன்னேற்றம் காணப் போவதாக சொல்லப் படும் குஜராத்தின் உண்மை நிலை என்ன. கழிந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியப் பிரதமரானால் என்று எதிர் பார்க்கப் படும் அண்ணன் நரபலியின் ஆட்சி பகுதியில் எழுபத்தி ஒரு தற்க்கொலைகள்.காரணம் வேறு ஒன்றுமே இல்லை.வறுமை தான்.
உலகப் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக நலிவடைந்த எத்தனயோ தொழில் களில் வைரம் பட்டை தீட்டும் தொழிலும் ஓன்று.பிளேக்நோய் புகழ் சூரத்தில் மட்டும் ஐந்து லட்சம் தொழிலார்களின் குடும்பங்கள் இந்த தொழிலையே மையமாக கொண்டு வாழ்ந்து வருகின்றன.இத்தொழில் பாதிப்படைந்ததும் இவர்களின் இவர்களின் குடும்பங்கள் வறுமை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டது.விளைவு இவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்க முடியாத சூழ்நிலை உருவாகியது.


நிலைமையை சமாளிக்க வேறு வழி இல்லாததால் கல்விக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி வலுவான கோரிக்கைகள் எழ ஆரம்பித்தன. அரசாங்கம் அலைகளிக்கவே வேறு வழி இல்லாத அப்பாவி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் மக்கள் தீர்வு காண முனைய வேண்டியதாயிற்று .வேறு வழி இல்லாமல் எங்கே ஐந்து லட்சம் மக்களும் அவர்களின் குடும்பங்களும் கோபப் பட்டு விட்டால் அவர்களின் ஓட்டுகளை இழக்க வேண்டி வருமே என்று சம்மதம் தெரிவிப்பது போல நடித்து அதற்க்கான படிவங்கள் வாங்க வந்த மக்கள் மீது மனிதாபிமான மற்ற முறையில் தடியடி நடத்தி ஏற்கனவே கால் வயிறும் அரை வயிறுமாக இருந்த மக்களின் உடல்களில் இரத்த காயங்கள ஏற்படுத்தி அரசுக்கு தன்னுடைய விசுவாசத்த வழக்கம் போல காவல் துறை காட்டிட்டு. பிரச்னை பெரிதாகவே வேறு வழி இல்லாமல் கல்விக் கட்டணம் ரத்து செய்வதாக மோடி அரசு அறிவித்தது.
இதனால் மட்டும் பிரச்னை தீர்ந்து விடுமா?கண்ணீரில்கழியும் ஏழை தொழிலாளியின் கால்வயிறு கஞ்சிக்கு வழி என்ன. இன்னும் கண்டுக் கொள்ள வில்லை கல்நெஞ்சு மோடி அரசு.விளைவு கடன் சுமை அழுத்த ஆரம்பிக்க வேறு வழி இல்லாமல் ஒவ்வொரு தொழிலாளியாக தற்கொலை செய்ய ஆரம்பிக்க கழிந்த இரண்டு மாதங்களில் மட்டும் அதிவேக வளர்ச்சி காணுவதாக போலியாக சொல்லப் படும் குஜராத் மாநிலத்தில் எழுபத்தி ஒரு தொழிலாளிகள் இதுவரை தற்கொலை செய்துள்ளனர்.வறுமையில் இத்தொழிலாளர்கள் தற்க்கொலைக்கு தூண்டப் பட்டு அவர்களின் கும்பங்கள் தவித்துக் கொண்டிருக்கும் இதே வேளையில் மோடிதான் அடுத்த பிரதமர் என்று போலியாக தூபம் போட்டுக் கொண்டே இந்த கார்ப்பரேட் முதலாளிகள் தம் சொகுசு வாழ்வில் குறைவில்லாமல் மூழ்கி வருகின்றனர்.
இவர்களின் முகஸ்துதியில் தன்னிலை மறந்து மயக்கத்தில் முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் மோடி தொழிலாளர்களுக்கு உதவிட முன்வரவில்லை.நிலைமை இப்படியே நீடித்தால் இன்னும் எத்தனை தற்க்கொலைகள் நீளுமோ என்ற அச்சம் பொதுநல ஆர்வலர்கள் மத்தியில் இன்று அதிகமாக எழுந்துள்ளது.
இதே நிலையில் இந்த மனிதர்? பிரதமாரானால் இன்னும் நிறைய தற்கொலைகள் இந்தியாவில் காண இது ஒரு சிறந்த ஆரம்பமும் முன்னுதாரணமும் ஆக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை .காரணம் கஷ்டத்தில் இருக்கும் தொழிலார்கள் மீது ஈவு இரக்கமற்ற தடியடி தாக்குதல் நடத்தியதும் இன்னும் குஜராத் கலவரத்தின் பொது பல ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களை குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் என்று பாராமல் அடித்தும் கற்பழித்தும் எரித்தும் கொலை செய்த கூட்டத்தை வழி நடத்திய இவருக்கு இந்த எழுபத்தி ஒரு தற்கொலைகள் ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் ஆகிவிட போவதுஇல்லை.

இப்படிதான் கழிந்த முறை இந்தியா ஒளிர்கிறது ஒளிர்கிறது என்று சொல்லி சவப் பெட்டி வரை மிச்சமில்லாமல் ஊழல் செய்தது மிச்சம் மீதி இருந்த இந்தியாவின் மானத்தையும் கப்பலேற்றிய கனவான்கள் தான் இவர்கள் எனபது மீண்டும் ஒருமுறை நினைவுக்கு வருகிறது.

No comments: