Sunday, 08 March 2009 07:04
கண்ணூர்: குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியையும், அவரது ஆட்சியையும் புகழ்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் அப்துல்லா குட்டி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யான ஏ.பி.அப்துல்லாகுட்டி (வயது 44) கேரளாவின் கண்ணூர் மக்களவைத் தொகுதியில் இருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அண்மையில் இவர், குஜராத் மாநில வளர்ச்சிக்காக மோடி, நன்கு திட்டமிட்டு செயல்படுவதாகவும், அதைபோன்றே கேரள அரசும் திட்டமிட்டு செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இக்கருத்துக்கு கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவருக்கு கடந்த ஜனவரியில் நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீஸுக்கு ஏ.பி.அப்துல்லாகுட்டி அளித்த விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என்று கூறி கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி, அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இதனிடையே, தான் கட்சி உறுப்பினராக மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றும், தனது முடிவை தானே தீர்மானித்துக் கொள்வேன் என்றும் அப்துல்லாகுட்டி தெரிவித்தார்.
மோடியை புகழ்ந்து பேசிய மா.கம்யூ எம்.பி. கட்சியிலிருந்து நீக்கம்
நன்றி : ஷேக் அப்துல் காதர்
Sunday, March 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment