Tuesday, February 3, 2009

கலவரம் வேண்டி கர சேவகர்களைக் கொன்ற காவிகள் !

பா.ஜ., பரிஷத்திற்கு முக்கிய பங்கு: ரயில் எரிப்பு வழக்கில் திருப்பம் பிப்ரவரி 03,2009,00:00 IST


ஆமதாபாத்: குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தில் அம்மாநில அமைச்சர் மற்றும் வி.எச்.பி., தலைவர் ஆகிய இருவருக்கும் முக்கிய பங்கு உண்டு என்றும், இருவரும் தலைமறைவு குற்றவாளிகளாக கருதப்படுவதாக இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியிலிருந்து கடந்த 2002ம் ஆண்டு பிப்., மாதம் 27ம் தேதி, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற கரசே வகர்கள் 57 பேர், கோத்ரா ரயில் நிலையத்தில் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பா.ஜ., தெரிவித்தது. ஆனால், இது தற்செயலாக நடந்த விபத்துதான் என சில அரசியல் கட்சிகள் தெரிவித்தன.

இந்நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வுக் குழுவை சுப்ரீம் கோர்ட், கடந்த மார்ச் மாதம் நியமித்தது. இக்குழுவின் தலைவராக, ராகவன் நியமிக்கப்பட்டார். இதில், உ.பி., முன்னாள் டி.ஜி.பி., சத்பதி, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கீதா ஜோரி, சிவானந்ஜா மற்றும் ஆஷிஷ் பாட்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் அது தொடர்புடைய ஒன்பது வழக்குகளை விசாரிக்கும், இக் குழுவினர், வரும் 15ம் தேதிக்குள் தங்களது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் கெடு விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கை மறு விசாரணை செய்த சிறப்பு புலனாய்வுக் குழு, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில், குஜராத் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மாயா கோத்னானி மற்றும் வி.எச்.பி., தலைவர் ஜெயதீப் பட்டேல் ஆகியோருக்கு முக்கிய பங்கு உண்டு என தெரிவித்துள்ளது.

இது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் ராகவன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நரோடா பாட்டியாவில் நடந்த கொலை வழக்கில் மாயா கோத்னானி மற்றும் ஜெயதீப் படேல் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது. இது தொடர்பாக இருவருக்கும், சிறப்பு புலனாய்வுக் குழு முன்பாக ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியும் இருவரும் அவ்வாறு ஆஜராகவில்லை. நாங்கள் அனுப்பிய நோட்டீசுக்கும் அவர்கள் பதில் அளிக்க வில்லை. எனவே அவர்கள் இருவரையும் தலைமறைவு குற்றவாளிகளாகவே கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.




நன்றி


மீடியா வாட்ச்

1 comment:

Anonymous said...

சகோதரர் இறை அடிமை அவர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் அபௌட் மீ என்பதற்கு கீழே அத்தஹியாத்தில் அமர்ந்திருப்பது போல் உள்ள உருவ பொம்மையை எடுத்துவிடுங்கள். உருவ வாசனை கூட நம்மில் இருக்கக்கூடாது. என்பது நமக்கு முக்கியமான ஒன்று.

மா சலாம்.

அப்துல் அசீஸ்.