Saturday, August 2, 2008

கைதான தீவிரவாதி ஹீரா பேட்டி!

அலி அப்துல்லாவுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?


கைதான தீவிரவாதி ஹீரா பேட்டி



அலி அப்துல்லாவுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்று கைதான தீவிரவாதி ஹீரா தெரிவித்தார்.

நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தபோது தீவிரவாதி ஹீரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:&
பழக்கம் ஏற்பட்டது எப்படி

இறைவன் ஒருவனே என்ற அமைப்பில் முன்பு இருந்தேன். அப்போது பலரை சந்தித்து பேசி இருக்கிறேன். ஒருபோதும் நாட்டுக்கு எதிராக நான் செயல்பட்டது இல்லை. குண்டு வைக்க வேண்டும் என்று நினைத்தது கூட கிடையாது.
இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளை என்மீது போட்டு சிறையில் அடைத்தனர். சென்னை புழல் சிறையில் அலி அப்துல்லாவும், நானும் ஒரே செல்லில் இருந்தோம். அப்போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

ரத்ததானம்

கடந்த 21&ந் தேதி நிபந்தனை ஜாமீனில் ஜெயிலில் இருந்து வெளியே வந்தேன். மண்ணடியில் தங்கி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தேன். நெல்லை போலீசார் என்னை விசாரிக்க வேண்டும் என்று அழைத்து வந்து இந்த வழக்கில் சேர்த்து விட் டனர்.

நாட்டுப்பற்று அதிகம் உடையவன் நான். 15 முறை ரத்ததானம் செய்து உள்ளேன். என்னை தீவிரவாதி என்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் தனிமை சிறையில் அடைத்துள்ளனர். இதனால் எனக்கு மனம் வருத்தமாக உள்ளது.

இவ்வாறு ஹீரா கூறினார்.

அப்துல் கபூர்
நெல்லை கோர்ட்டுக்கு வந்த அப்துல் கபூர் கூறியதாவது:

எனக்கும், தீவிரவாதத்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. சென்னையில் செருப்பு கடையில் நான் வேலை செய்தபோது ஒரே ஊர்க்காரர் என்ற முறையில் ஹீராவுடன் பழகி வந்தேன். காஞ்சீபுரம் மாவட்டம் ஆலந்தூர் கிளையின் ஒரு அமைப்பின் (தவ்ஹீத் ஜமாத்) செயலாளராக பொறுப்பு வகித்து வந்தேன். அப்போது பேட்டை பள்ளிவாசலில் இரு பிரிவுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

நான் என்னுடைய அமைப்பு அல்லாமல் மற்றொரு அமைப்பை (சுன்னத்துல் ஜமாத்) ஆதரித்தேன். இதனால் ஆத்திரம் அடைந்த என்னுடைய அமைப்பினர் என்னை போலீசில் சிக்க வைத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் என்னை போலீசார் கைது செய்தனர். எனக்கு டைம் பாம் செய்ய தெரியாது.
இவ்வாறு அப்துல் கபூர் கூறினார்.

நன்றி : தினத் தந்தி

No comments: