துபாயில் லட்சக்கணக்கில் மோசடி புகார் கேரள சாமியார் வீட்டில் சோதனை: ஆபாச சி.டி.க்கள் சிக்கின
துபாய் நாட்டில், லட்சக்கணக்கில் மோசடி செய்த புகார் தொடர்பாக, கேரள சாமியாரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் ஆபாச சி.டி.க்கள் சிக்கின. வெளிநாட்டுக்கு அவர் பெண்களை கடத்தினாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கேரள சாமியார்
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த கட்டப்பனை என்ற இடத்தை சேர்ந்தவர் அமிர்தா சைதன்யா சுவாமி என்ற சந்தோஷ் மாதவன். இவர் கேரளாவில் பிரபலமாக விளங்கி வந்தார். இவர் அடிக்கடி துபாய் மற்றும் அரபு நாடுகளுக்கு விமானத்தில் சென்று வருவார்.(?)
இந்த நிலையில் அவர் மீது குற்றம் சாட்டி, சர்வதேச போலீசில் இருந்து, கேரள போலீசுக்கு கடிதம் வந்தது. சாமியாரின் நடவடிக்கையை கண்காணிக்கும் படியும், அவர் ஐக்கிய அரபு நாடுகளில் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாகவும், இது பற்றி கேரளாவில் விசாரிக்கும்படியும், அவரை கண்டு பிடிக்கும்படியும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் துபாயில் வசிக்கும் சாராபின் எட்வின் என்ற பெண்ணும் ஒரு புகாரை, கேரள போலீசுக்கு பேக்சில் அனுப்பி இருந்தார். அதில் சாமியார் தன்னிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக குறிப்பிட்டு இருந்தார். இந்த இரண்டு புகார்களையும் வைத்து, கேரள போலீசார் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வீட்டில் சோதனை
கடந்த 10-ந் தேதி, கொச்சியில் உள்ள அமிர்தா சைதன்யா சுவாமியின் அடுக்கு மாடி வீடு ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அமிர்தா சைதன்யா, வீட்டில் இல்லை. போலீசார் அங்கு துருவித்துருவி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சாமியார் அமரும் புலித்தோல் ஒன்றும், ஏராளமான ஆபாச சி.டி.க்களும், ஆபாச புத்தகங்களும், போலீஸ் னினிபார்ம் ஒன்றும், நிலம் தொடர்பான சில தஸ்தாவேஜுக்களும், சந்தன கட்டைகளும், வெளிநாட்டு மதுபாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.
சாமியாருக்கு சொந்தமான எர்ணாகுளம் விருந்தினர் மாளிகை மற்றும் ஆசிரமத்திலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். சாமியாரின் பூர்வீக வீடு கட்டப்பனையில் உள்ளது. அங்கும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கேரள மந்திரிகள் பேட்டி
இதுகுறித்து கேரள வனத்துறை மந்திரி பினாய் விஸ்வம் கூறியதாவது:-
சாமியாரின் வீட்டில் இருந்து ரூ. 11/2 லட்சம் மதிப்புள்ள புலித்தோல் சிக்கி இருக்கிறது. புலித்தோல் வைத்திருப்பது சட்டப்படி குற்றம். எனவே அவர் மீது, எந்தவித தயவு தாட்சண்யமும் இன்றி, நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றி கேரள வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரித்து, அரசுக்கு அறிக்கை கொடுக்க உத்தரவிட்டு இருக்கிறேன்.
இவ்வாறு மந்திரி விஸ்வம் கூறினார்.
உள்துறை மந்திரி கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், "சாமியார் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இது சர்வதேச போலீஸ் பிரச்சினை. எனவே இதில் எந்த குறுக்கீடும் இன்றி நடவடிக்கைகள் இருக்கும். சந்தோஷ் மாதவன் என்ற பெயரில் 2 பேர் கேரளாவில் இருக்கிறார்களா? என்றும் சர்வதேச போலீஸ் கேட்டு இருக்கிறது. இது பற்றியும் விசாரிக்கிறோம்'' என்று குறிப்பிட்டார்.
உண்மையான புலித்தோல்தானா?
துபாய் பெண் அனுப்பிய புகார் தொடர்பாக ஒரு வழக்கும், புலித்தோல் வைத்திருந்ததாக ஒரு வழக்கும், சாமியார் மீது, கேரள போலீசார் பதிவு செய்து இருக்கிறார்கள். கைப்பற்றப்பட்ட புலித்தோல் பற்றி போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. அது உண்மையிலேயே புலித்தோல் தானா? என்பதை உறுதிப்படுத்த அதை ஐதராபாத்தில் உள்ள ஆய்வு நிலையத்துக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.
சர்வதேச மற்றும் கேரள போலீசாரால் தேடப்படும் சந்தோஷ் மாதவன் 2 பெயரில் பாஸ்போர்ட் வைத்திருப்பதாக தெரிகிறது. அவர் கேரளாவில் இருந்து சில பெண்களை அரபு நாடுகளுக்கு, கடத்தினாரா? போதைப்பொருள் போன்றவற்றை கடத்தினாரா? நிழல் உலக தாதாக்களுடன் அவருக்கு தொடர்பு உண்டா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சாமியார் ஆவதற்கு முன்
சந்தோஷ் மாதவன், சாமியார் ஆவதற்கு முன் சாதாரண மனிதராக இருந்தார். அப்போது அவர் துபாயில் ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் துபாய் போலீசுக்கு `டிமிக்கி' கொடுத்துவிட்டு, கேரளா வந்து, சாமியார் ஆகி குறி, ஜோதிடம் சொல்லி பிரபலம் ஆனதாக கூறப்படுகிறது.
சந்தோஷ் மாதவனுக்கு 2 மனைவிகள் உண்டு. அவர்கள் தற்போது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அவர் அழகிகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததே இதற்கு காரணம்.
நடிகர்கள் யார்?
மேலும் அவர் அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்களை கைக்குள் போட்டு வைத்திருந்தார் என்றும், உயர் மட்ட அளவில் விபசாரம் நடத்தி வந்தார் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சாமியாருடன் தொடர்பு வைத்திருந்த அரசியல் புள்ளிகள்-நடிகர்கள் யார்? என்று போலீசார் துருவித்துருவி விசாரிக்கிறார்கள்.
அன்பிர்க் கினிய இந்து சமய சகோதரர்களே இத்தகைய போலிகள் அன்றிலிருந்து இன்று வரை என்றும் உங்களை பக்தியின் பெயரில் ஏமாற்றுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் உள்ளது.நீங்கள் கடவுள் என்றால் என்ன என்பதனைப் பற்றி உண்மையாக அறிந்து கொள்ளாததுதான்.சாதாரணமாக ஒரு கம்பெனி யில் ஒருவரை வேலைக்கு தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் கூட அவருக்கு சில தகுதிகள் இருக்கிறதா என்று சோதித்து தேர்ந்தெடுக்கும் போது உலகம் மொத்தத்துக்கும் வழிபாட்டுக்கு அல்லது வழிபட போதுமான தகுதி நான் தேர்ந்தெடுத்த கடவுளுக்கு உள்ளதா என்று நிங்கள் சற்று சிந்தித்து பாருங்கள்.அப்படி இதுவரை சிந்தித்திருக்கவில்லை எனில் இனியேனும் உங்கள் கடவுளை தேடிக் செல்லுங்கள். உங்களை படைத்தவனை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.மனிதனால் படைக்கபட்டவற்றை பகுத்தறிந்து கொள்ளுங்கள் .
No comments:
Post a Comment