டேனிஸ் மக்கள் கட்சியோடு உள்ள உறவை துண்டிக்க கண்சொவேடிவ் இளைஞர் அணி வலியுறுத்தல்
முஸ்லீம்களுக்கு எதிரான கொள்கையை கடைப்பிடித்து வரும் டேனிஸ் மக்கள் கட்சியுடன் சேர்ந்து செயல்படுவதை முழுவதுமாக நிறுத்திவிடும்படி அரசை ஆதரிக்கும் கண்சொவேடிவ் இளைஞர் அணியை
சேர்ந்த கிறிஸ்டியான் துலூசன் டால் தெரிவித்தார். அனைத்து முஸ்லீம்களையும் ஒட்டு மொத்தமாக பகைத்துக் கொள்ளும் டேனிஸ் மக்கள் கட்சியின் போக்குடன் இணைந்து போக முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது இவ்விதமிருக்க முஸ்லீம் பெண்களின் தலைத்துண்டு அணிவதை எதிர்க்கும் பிரச்சனை , முகமது (நபி) கேலிச்சித்திரங்கள் போன்றவற்றால் முஸ்லீம்களுடன் பகைத்துக் கொள்ளும் போக்கை டென்மார்க் பிரதிபலிபப்பது இனி வரும் காலங்களில் டென்மார்க்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றைய நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தி துண்டாக்கிவிடும் அபாயத்தை உள்ளடக்கியது என பெல்ஜியம் தத்துவ, சமூகவியல் பேராசிரியர் கார்மன் டி லே தெரிவித்துள்ளார்.
நன்றி : சிங்கை இமாம் அலி
Friday, May 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment