Wednesday, May 28, 2008

ஆட்சியைப் பிடிக்க சுயேட்சை க்களை இரகசிய இடத்தில் மறைத்துவைத்திருக்கும் ப ஜ க


சுயேச்சை எம்எல்ஏக்கள் ரகசிய இடத்தில் தங்கவைப்பு
Thursday, 05.29.2008, 05:33am (GMT)


கர்நாடகாவில் பா.ஜ.வை ஆதரிக்கும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ரகசிய இடத்தில் தங்கவைப்பு

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களையும் ரகசிய இடத்தில் பாரதிய ஜனதா தங்க வைத்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் 110 இடங்களை பிடித்த பா.ஜ. நாளை பதவியேற்கிறது.

முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளார். பெரும்பான்மைக்கு மேலும் 3 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற 6 சுயேச்சைகளும் பா.ஜ.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம், 80 இடங்களை கைப்பற்றியுள்ள காங்கிரசும் 28 இடங்களை பிடித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக சில காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். அப்படி நடந்தால், ஆட்சி அமைக்க 5 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை.

இதனால், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் விலை பேசலாம் என்று பா.ஜ. கருதுகிறது. எனவே, 6 சுயேச்சை எம்.எல்..க்களையும் பா.. நேற்று முன்தினம் இரவே ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விட்டது. அவர்கள் கர்நாடகாவிலேயே இருக்கிறார்களா அல்லது வேறு மாநிலத்துக்கு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்களா என தெரியவில்லை.

நாளை நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சிறிது நேரத்துக்கு முன்பாகதான் அவர்கள் அங்கு அழைத்து வரப்படுவார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : தமிழ் நியூஸ்

No comments: