Wednesday, May 28, 2008
இஸ்ரேல் பதுக்கி வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் -அமெரிக்க அதிபரின் குற்ற சாட்டு
இஸ்ரேலிடம் 150 அணு குண்டுகள் காட்டர் எச்சரிக்கை !
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மிக்காட்டர் இஸ்ரேல் மொத்தம் 150 அணு குண்டுகளை உலக சமுதாயத்திற்கு தெரியாமல் பதுக்கி வைத்திருப்பதாக உலக சமுதாயத்திற்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். இந்த 150 அணு குண்டுகளும் சர்வதே சட்டங்களுக்கு உட்படாத திருட்டுத்தனமான குண்டுகள் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா 12.000 அணு குண்டுகளை வைத்துள்ளது, ரஸ்யாவிடமும் அதேயளவு உள்ளது. பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளிடம் பல நூற்றுக்கணக்கான அணு குண்டுகள் உள்ளன என்றும் 83 வயதுடைய ஜிம்மிக்காட்டர் வேல்ஸ்சில் வைத்துத் தெரிவித்தார். மற்றைய நாடுகள் தம்மிடம் அணு குண்டு இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளன ஆனால் இஸ்ரேல் ஒப்புக்கொள்ளாமல் இருப்பதே பாரிய தவறு என்றும் தெரிவித்தார். காட்டரின் கருத்து பொறுப்பற்ற கருத்தென்று இஸ்ரேலிய உளவுப்பிரிவு தலைவர் அகரோன் சீவி பார்காஸ் தெரிவித்தார். இது குறித்து காட்டர் மேலதிக கருத்துக்களை தெரிவிக்கவில்லை. அதேவேளை பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மனித உரிமைகளை மதித்து செயற்படவில்லை என்றும் அவர் குறைகூறினார். காட்டர் 2002 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : அலைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment