வேலூர் கோட்டை பள்ளிவாசலில் காவி கொடி எற்றுவோம் என இந்து மக்கள் கட்சியினர் மிரட்டல்!
வேலூரில் இருக்கும் கோட்டையில் பூட்டிக் கிடக்கும் பள்ளிவாசலை தொழு கைக்கு திறந்துவிடக் கோரி தமுமுக சார்பில் பல்வேறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசோடு தொடர்புள்ள விவகாரம் என்பதால், தொல் பொருள் ஆய்வுத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் அம்பிகா சோனிக்கும், பிரதமருக்கும், தமுமுக சார்பில் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உரிய நடவடிக்கைகள், எடுக்கப்படாததால் மே9, ஆம் தேதி வேலூர் கோட்டைக்குள் நுழைந்து இப்பள்ளியில் ஜும்அ தொழுகை நடத்தப் படும் என்றும், தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் ஜும்அ உரை நிகழ்த்து வார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சற்றும் எதிர்பாராத வண்ணம் வேலூர் மாவட்டம் முழுவதும் பெரிய எழுச்சி எற்பட்டுள்ளது. ஜமாஃத்து கள், உலமாக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த விழிப்பு ணர்வை ஜனநாயகப்படுத்தி பள்ளிவாசல் மீட்பை உரிய வகையில் அணுக வேண்டும் என்பதற்காக வேலூர் மாவட்ட தமுமுக சார்பில் வட்டமேஜை அலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஓபாயி, மாநிலச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி ஆகியோர் வேலூருக்கு வருகை தந்தனர். முன்னதாக கோட்டைக்குள் நுழைந்து பூட்டிக்கிடக்கும் பள்ளிவாசலை பார்வையிட்டனர். அதன்பிறகு வட்ட மேஜை அலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு போராட்ட வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினர். பொதுமக்கள், ஜமாஃத்தார்கள், உலமாக்கள் வட்டாரத்தில் குவிந்துவரும் பேராதரவை முறைப்படுத்தி பள்ளிவாசலை மீட்க வேண்டும் ஊன்று முடிவு செய்யப்பட்டது.
கலவரம் செய்ய திட்டம்
இந்நிலையில் இப்பிரச்சனைக்கு சிறிதும் தொடர்பில்லாத இந்து மக்கள் கட்சியினர் தேவையின்றி மூக்கை நுழைத்துள்ளனர். தமுமுக நடத்தும் போராட்ட தினமான மே9 அன்று கோட்டைக்குள் நுழைந்து பள்ளிவாசலில் காவிக் கொடியை எற்றுவோம் என கொக்கரித்துள்ளனர்.இது அமைதிப் பூங்காவான தமிழகத்தில் கலவரத்தை உண்டு பண்ணவேண்டும் என்ற அவர்களின் கெட்ட எண்ணமே தவிர வேறு ஒன்றும் இல்லை.இதன் மூலம் சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்க சதி செய்யப் பட்டுள்ளது என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருதுகின்றனர்.
இது கண்டிக்கத்தக்க ஐன்றாகும்.
முஸ்லிம்களின் சகிப்புத் தன்மை
இதே கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோயில் அருகில் உள்ளது. இந்த வழிபாட்டுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இங்குள்ள தேவா லயத்தில் கிறித்தவர்கள் வழிபாடு நடத்து வதையும் எதிர்க்கவில்லை. காரணம் அவரவருக்குரிய இடத்தில் அவரவர் வேலைகளை செய்கிறார்கள் என்பதால் தான்!
மக்கள் ஆதரவு
முஸ்லிம்களின் நியாயமான உரிமைக் குரலுக்கு பிற சமுதாய மக்களும் அதரவு நல்கியிருக்கிறார்கள். பிரச்சனை முஸ்லிம்களுக்கும், மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கும் இடையிலானது தானே தவிர, முஸ்லிம் களுக்கும், இந்துக்களுக்குமானதல்ல. அனால் இதை வேறு பக்கம் திருப்பும் முயற்சியில் இந்து மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளது. இது தோல்வியில் முடியும் ஊன்பதில் ஏயமில்லை. காரணம் வேலூரில் வாழும் பெரும் பாலான இந்து மக்கள் முஸ்லிம்களின் நியாயமான இவ்வுரிமைப் போராட்டத் திற்கு ஆதரவளித்துள்ளனர். அவர் களின் ஆதரவை ஒருங்கிணைக்கும் பணியை தமுமுக முடுக்கிவிட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி தேவையின்றி இவ்விஷயத்தில் தலையிட்டுள்ளதை வேலூரில் செயல்படும் பல அரசியல் கட்சிகளும், சமூக நல ஆர்வலர்களும் கண்டித்துள்ளனர். அதேநேரம் அவர்களின் மிரட்டல் வேலூர் மாவட்டத்தில் பதட்டத்தை கூட்டியிருக்கிறது .
அனைத்து இசுலாமிய அமைப்புகளும் இந்தப் பிரச்சனையை தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை மறந்து ஒன்ற்றுப் பட்டு ஒரே அணியில் இருந்து போராடி வெட்டி பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.இது நமது உரிமை பிரச்சனை என்பதை மறந்து விடாமல் ஒவ்வொரு முஸ்லிமும் இதற்க்காக உங்களால் முடிந்த முயற்சியை செய்யுங்கள்.
இப்படிக்கு சமுதாய ஒற்றுமையை வேண்டி நிற்கும்
இமாம் அலி.
No comments:
Post a Comment