Tuesday, April 15, 2008

இந்தியா எங்கள் தாய் நாடு

இது எங்கள் இந்தியா
இதற்கோர் இனிய கதை உண்டு .
என் பாட்டனும் முப்பாட்டனும் எதையும் நம்பி ஏமாந்திருந்த காலத்தில்
எருது ஒட்டி வந்ததாம் சில மனித எருமைகள்
இந்தியாவிலோ எங்கும் பசுமை .
பசி உள்ள எருமை கண்டால் விடுமா ?
கவிழ்ந்து படுத்துக் கொண்டது
என் நாட்டை கவிழ்த்து விட வேண்டும் என்று .
எதையும் நம்பும் என் பாட்டனும் முப்பாட்டனும்
எருமை மேய்த்து வந்தவன்
எருமைகளாய் இவர்களையும், மேய்த்து விட
இறுமாப்பு கொண்டதை அறிந்திருக்கவில்லை.முடிவு
மனிதனுக்கே வர்ணம் பூசும் கேவலம்
மிருகங்களோடு கிடந்தவனுக்கு
மாமிச பக்கங்கள் தானே தெரியும்.
தலை முதல் கால் வரை தனி தனியே பிரித்து விட்டான்
எதையும் நம்பிய முப்பாட்டன்களை .
பூவையர் குலத்தை விட்டானா ? இல்லை
அவர்களின் காதிலும் பூவை வைத்து விட்டான்.
மாராப்பு போட்டவள் மகா பாவி
மன்னவனை இழந்தவள் மலத்தை விட கேவலம்
அழகாய் இருந்து விட்டால்
அவள் எந்த ஜாதியாய் இருந்தாலும்
இந்த எருமை மேய்ப்பவர்களுக்கு பெஞ்சாதி ,
இன்னும் எத்தனையோ இழிநிலை இந்த
மலரினும் மென்மையான மாந்தயர் குலத்துக்கு ,
விட்டானா அத்தோடு
மலத்தை மனமுவந்து தொடும் இவன்
மனிதனில் ஒரு சிலரை தொடமட்டானாம்
இல்லை இல்லை
அவர்களின் மூச்சை கூட தீண்ட மாட்டானாம் .
எருமை சாணத்தை எடுத்து விளையாடியவனின் எக்காளத்தை கண்டாயா.
எங்கும் கொடுமை எதிலும் கொடுமை
எது கிடைத்தாலும் அது இவனுக்கு மட்டுமே
இப்படி ஒரு அவலம் இருக்கையிலே
இம்மையின் இனிமையை விட
மறுமையின் மகத்துவம் சொல்லிட
வந்த மனித குல மணிவிளக்கு எம்பெருமானார் (ஸல்) அவர்களின் அறிவுரைகேட்டு மக்களை மக்களை மதித்திட
மனித குல பெருமை காத்திட
மண்ணிலே மகத்துவம் நிறைந்த மார்க்கம் இஸ்லாம்
கடலில் அசையும் கப்பலாய்
காற்றினில் வரும் கீதமாய்
இனிய பாங்கோசயுடனே
இந்த தரிதிரர்களால் தவிடுபொடி ஆக்கப்பட்டு கண்ணீரில் மிதக்கும்
இந்த கங்கை கொண்ட புரத்தையும்
இந்தியர்களின் இரத்தம் சிந்தப் பட்ட சிந்து நதிக் கரையிநிலும் சில்லென வந்து சேர்ந்தது.
பசுமை கண்ட இந்தியாவில் பாசம் அறியா மக்களிடையே
பரிவும் பாசமும் கனிவும் கொண்டதாய்
அள்ளி அணைக்கும் தாய்மை நிறைந்ததாய்
பார்ப்பன் முதல் பஞ்சமன் வரை
அனைவரையும் அரவணைக்க
அன்புக் கரம் விரித்து அருமையாய் அனைத்துக் கொண்டது.
அப்போது தான் அறிந்து கொண்டான்
அதுவரை அறிவு கெட்டிருந்த பாட்டனும் முப்பாட்டனும்.
பார்ப்பானுக்கு சொந்தமல்ல பகவான்
அழிவை சொல்வதல்ல கடவுள்.
உன்னிடம் படயலைக் கேட்பதல்ல பக்தி.
ஒருவன் தான் இறைவன்
ஓரினம் மட்டும் அவனை உரிமை கொள்ள முடியாது என்ற உன்னத உண்மையை.


உணர்ந்துக் கொள் சமுதாயமே நீ இந்துவாயோ அல்லது இன்ன பிறதாயோ இருப்பது முக்கியமல்ல உன்னிறைவனிடம் உன்னுடைய உரிமை என்ன எனபது தான் இங்கே உணர வேண்டியது உயிருள்ள மனிதன் நீ உன்னில் உணர்த்தத்தான் இதை உனக்கு சமர்ப்பிக்கிறேன்

1 comment:

Anonymous said...

மாட்டின் மூதிரத்தைக் குடிப்பானாம்
மனிதரில் ஒரு சிலரை தொடமாட்டானாம் .........

உண்மையில் இஸ்லாம் மட்டும் இந்த மண்ணில் கால் பதிக்க வில்லை என்றி ருந்தால் இந்தியர்கள் இன்று மண்ணோடு மக்கிப் போயிருந்திருபார்கள். பார்ப்பனியம் ஒழியும் வரை இந்த பாருலகம் பரிதவித்தே ஆக வேண்டும்

ஒன்று படுவோம் சமுதாயமே.இந்த சந்தர்ப்ப வாத அடிவருடிகளின் அழிவிற்கு வழி வைப்போம்
அன்புடன்
யூசுப்
குவைத்