தமிழக பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை குறைவு
ஆரம்ப பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை குறைவு: தமிழகத்திற்கு நான்காமிடம்
---------------------------------------------------------
புதுடில்லி: இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13 சதவீதம் இருந்தும், ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் 9.39 சதவீதம் மட்டுமே முஸ்லிம் மதத்தினராக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படும் முஸ்லிம்கள் வெறும் 7.52 சதவீதம் பேர் மட்டுமே. பள்ளிகளில் முஸ்லிம்கள் சேர்க்கப்படுவது குறித்து தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைகழகம், முதல் முறையாக நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் உ.பி., பீகார், மேற்கு வங்கம், கேரளா, போன்ற மாநிலங்களில், இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இம்மாநிலங்களில், முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கும் பள்ளிகளில் அவர்களின் சேர்க்கைக்கும், பெரியளவில் வித்தியாசம் உள்ளது. அசாம், காஷ்மீர், ஆந்திராவில் நிலைமை சற்று தேவலை.சில மாநிலங்களில், இதர பிற்படுத்தப்பட்ட இனத்தவரில் முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டு இருப்பதால், இந்த புள்ளி விவரங்களில், சற்று தவறு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சில பள்ளிகளில் முஸ்லிம்கள் இனம் பிரித்து சேர்க்கப்படுவது இல்லை. அடுத்த ஆண்டு ஆய்வின் போது, இது தொடர்பான துல்லியமான புள்ளி விவரங்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஆய்வின் படி, காஷ்மீரில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை 66.97 சதவீதம். நடுநிலை வகுப்புகளில், முஸ்லிம் மாணவர் சேர்க்கை 60.50 சதவீதம். அசாமில், முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசிப்பதால், அங்கும் மாணவர் சேர்க்கை 30.92 சதவீதமாக உள்ளது. ஆந்திராவில் ஆரம்பப் பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை 9.17 சதவீதம். நடுநிலைப் பள்ளிகளில் இது 9.11 சதவீதமாக உள்ளது.மேற்கு வங்கத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 25 சதவீதமாக இருந்த போதிலும், ஆரம்பப்பள்ளிகளில், முஸ்லிம் மாணவர் சேர்க்கை 27.92 சதவீதமாக உள்ளது. கேரளாவில், முஸ்லிம் மக்கள் தொகை 24.7 சதவீதம், ஆனால், முஸ்லிம் மாணவர் சேர்க்கையில் ஆரம்பப்பள்ளியில் 10.13 சதவீதமும், நடுநிலைப்பள்ளிகளில் 9.59 சதவீதமாகவும் உள்ளது. இந்த ஆய்வில், முந்தைய ஆண்டுகளை விட ஆதி திராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர்களின் மாணவர் சேர்க்கை பெரியளவில் வித்தியாசப்படவில்லை. பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை, ஆரம்பக்கல்வி மற்றும் நடுநிலைக் கல்வி வகுப்புகளில், தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றின் அடிப்படையில், கல்வி மேம்பாட்டு புள்ளி கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், கேரளாவே தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. புதுச்சேரி மாநிலம் இரண்டு புள்ளிகள் பின்தங்கினாலும், இரண்டாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த டில்லி, மேலும் ஓரிடம் தாண்டி, மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டது.கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆந்திரா நான்கு இடங்கள் பின்தங்கி, எட்டாவது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கர்நாடகாவும் கூட ஆறாவது இடத்தில் இருந்து எட்டாவது இடத்துக்கு பின்தங்கி உள்ளது.
நன்றி : தினமலர்
அய்யா சமுதாய தலைவர்களே !
கொஞ்ச நாளைக்கு நீ பெருசா நான் பெருசான்னு சண்டை போடுறதை நிறுத்திகிட்டு இந்த சமுதாயம் செழித்து வளர தேவையான கல்வி கிடைக்க செய்ய கூடாதா?
Saturday, February 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment