சுதந்திர இந்தியாவின் முன்னேற்றத்தை ி கண்டு உலகமேவியக்கும் இந்த சூழலில் சுதந்திர தினத்தை முழுமையான மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டியது நாட்டுப்பற்று உடைய ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தலையாய கடமைகளில் ஒன்றாகும்,இதனை எவரும் மறுக்க முடியாது ஆனால் இன்று சுதந்திர தினத்தை தேச துரோகிகள் மட்டும் கொண்டாட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் சுதந்திரத்திற்க்காக பலப்பல தியாகங்கள் செய்த எத்தனையோ சமுதாயங்களின் தியாக வரலாறுகள் திரித்து திசை திருப்பப் படுகின்றன.இதற்காக கல்வித்துறையில் நுழைந்த சில பல பாசிஸ்டுக்கள் இந்த வரலாற்று திரிப்பு பணியை செவ்வனே செய்து முடித்து விட்டார்கள். வரலாறு இல்லாத இந்த வீணர் களின் வேலையால் உண்மையான பல தியாகிகளின் வரலாறுகள் அழிக்கப் பட்டு விட்டன.இந்த சூழ்நிலையில் இந்திய சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட இஸ்லாமியர்களை கவுரவிக்கும் வகையிலும் இஸ்லாமியர்களின் நாட்டுப் பற்றை இந்த உலகுக்கு காண்பிக்கவும் வேண்டி கடந்த பல ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்கள் ஓரணியில் நின்று இந்த தினத்த சீரும் சிறப்போடும் விழாக்கோலம் பூண்டு கொண்டாடி வருகிறார்கள். இதனால் வயித்தெரிச்சல் பிடித்த பாசிஸ்டுக்கள் அவர்களால் முடிந்த அனைத்து இடையூறையும் கொடுத்து வருவது வாடிக்கை.இதில் காவி வெறி பிடித்த பல அதிகாரிகளும் அடக்கம்.நிலைமை இப்படி இருக்க எத்தனை எதிர்ப்பு வந்தாலும் எங்கள் நாட்டுப் பற்றை யாராலும் குறைத்து விட முடியாது என்பதனை இந்த உலகுக்கு காட்ட வேண்டிய கட்டயாத்தில் இன்று இந்த சமுதாயம் இருந்து கொண்டு இருக்கிறது.
இருப்பினும் அத்தனை இடையூறுகளையும் தாண்டி ஒட்டு மொத்த தியாகிகளையும் கவுரவிக்கவேண்டி ஒரு மரியாதை அணிவகுப்பு நடத்த திட்டமிட்டு அதற்கான ஒத்திகை ஆங்காங்கே நடை பெறுவது இன்று பொது அறிவுடைய அனைவரும் அறிந்த ஒன்று தான்.ஆனால் சமீப காலமாக சந்தையில் தன்னுடைய மதிப்பையும் வியாபாரத்தையும் இழந்து வரும் சில தினசரி பத்திரிகைகள் தன்னுடைய வியாபாரத்தை அதிகரிக்க வேண்டி போலியான தகவல் களையும் தேவையற்ற பரபரப்புகளையும் உண்டுபண்ணி சமுதயத்தின் நிம்மதியை கெடுத்து வருகின்றன.உதாரணமாக மேலே நான் குறிப்பிட்ட படி சுதந்திர தின அணிவகுப்புக்கான ஒத்திகை ஆங்காங்கே நடை பெறுவது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்க வியாபாரத்தை பெருக்க இந்த பத்திரிகை உண்டுபண்ணும் வீண் பதட்டத்தை பாருங்கள் .........
தமிழகத்தில் இளைஞர்களுக்கு 'அணிவகுப்பு பயிற்சி' :பின்னணி குறித்து போலீசார் விசாரணை
விசாரணையில், தமிழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்தது அம்பலமானது. மேற்கண்ட அமைப்பின் தலைவனாக செயல்பட்ட, தஞ்சை அதிராமபட்டினத்தைச் சேர்ந்த தவுபீக் என்பவரை கைது செய்ய, மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும், "வெளிப்படையான அமைப்பு' என கூறிக் கொண்டு, திரைமறைவில் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் அமைப்புகள் மற்றும் அதன் நிர்வாகிகளை, ரகசியமாக கண்காணித்து அறிக்கை அனுப்புமாறு உளவுப் பிரிவு போலீசுக்கு, டி.ஜி.பி., அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சமீபத்தில் மாநிலம் முழுதும் நடந்த கண்காணிப்பில், ஒரு பிரிவு இயக்கத்தினர் "அணிவகுப்பு பயிற்சி'யில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. 25 வயதுக்கு உட்பட்ட 500 இளைஞர்களை தேர்வு செய்துள்ள அந்த இயக்கத்தினர், ஞாயிறு தோறும் அதிகாலை 5.30 முதல் 6.30 மணி வரை கோவை, சென்னை, மதுரை மற்றும் திருச்சியில் "அணிவகுப்பு பயிற்சி'அளித்து வருகின்றனர்.
கோவையில், உக்கடம் மைதானத்தில் அளிக்கப்படும் பயிற்சியில் 200 இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். பயிற்சியின் போது சுய ஒழுக்கம், உடல் திறன் மற்றும் மனவலிமை யை மேம்படுத்தும் ஆலோசனைகளும் அளிக்கப்படுகின்றன. இது பற்றி தகவலறிந்த உளவுப் பிரிவு போலீசார், பயிற்சியை ரகசியமாக போட்டோ எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.போலீசுக்கு இணையாக அளிக்கப்படும் அணிவகுப்பு பயிற்சியை கண்ட அதிகாரிகள், எதற்காக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது, பயிற்சி அளிப்பது யார், யாரெல்லாம் இதில் பங்கேற்கின்றனர் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் உயரதிகாரி கூறியதாவது:சந்தேகத்துக்குரிய இயக்கத்தினரின் "அணிவகுப்பு பயிற்சி' தொடர்பான தகவல்கள் திரட்டப் பட்டுள்ளன. அந்த இயக்கத்தினர், இந்த ஆண்டில் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருப்பதாகவும், "கொடி அணிவகுப்பு' நடத்த ஏதுவாக இப்போதிருந்தே பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த இயக்கத்தினர் ஆள் கடத்தல், ஆயுதம் பதுக்கல் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டதாக கடலூர் போலீசில் சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு பதிவாகி இருப்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இவர்களது நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்துக்கு போட்டி? :
இந்து இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.,ல் தொண்டர்களுக்கு உடற்பயிற்சி, அணிவகுப்பு பயிற்சி ஆகியவை கட்டாயமாக உள்ளன. ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் சீருடை அணிவகுப்பு ஆண்டுதோறும் விஜயதசமியன்று நடத்தப்படுகிறது. அதற்கு போட்டியாகவே இளைஞர்களை திரட்டி "அணிவகுப்பு ஒத்திகை' நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.கடந்த 18ம் தேதி அதிகாலையில், நெல்லை மாவட்டம், மேலப்பாளையம், ரகுமானியா மேல்நிலைப் பள்ளியில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டிருந்த 20 இளைஞர்களை மேலப்பாளையம் போலீசார் எச்சரித்து விரட்டினர். மறுநாள், மற்றொரு தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சியில் ஈடுபட முயன்றனர். போலீஸ் எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் இளைஞர்களை வெளியேற்றியது. ஆனால், சென்னையில் மண்ணடி, திருச்சியில் துவரங்குறிச்சி, கோவையில் உக்கடம் ஆகிய பகுதிகளில் இவர்களது பயிற்சி இப்போதும் தொடர்ந்து நடக்கிறது.
-நமது சிறப்பு நிருபர்-
-நமது சிறப்பு நிருபர்-
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment