Saturday, August 2, 2008
கைதான தீவிரவாதி ஹீரா பேட்டி!
கைதான தீவிரவாதி ஹீரா பேட்டி
அலி அப்துல்லாவுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்று கைதான தீவிரவாதி ஹீரா தெரிவித்தார்.
நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தபோது தீவிரவாதி ஹீரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:&
பழக்கம் ஏற்பட்டது எப்படி
இறைவன் ஒருவனே என்ற அமைப்பில் முன்பு இருந்தேன். அப்போது பலரை சந்தித்து பேசி இருக்கிறேன். ஒருபோதும் நாட்டுக்கு எதிராக நான் செயல்பட்டது இல்லை. குண்டு வைக்க வேண்டும் என்று நினைத்தது கூட கிடையாது.
இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளை என்மீது போட்டு சிறையில் அடைத்தனர். சென்னை புழல் சிறையில் அலி அப்துல்லாவும், நானும் ஒரே செல்லில் இருந்தோம். அப்போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
ரத்ததானம்
கடந்த 21&ந் தேதி நிபந்தனை ஜாமீனில் ஜெயிலில் இருந்து வெளியே வந்தேன். மண்ணடியில் தங்கி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தேன். நெல்லை போலீசார் என்னை விசாரிக்க வேண்டும் என்று அழைத்து வந்து இந்த வழக்கில் சேர்த்து விட் டனர்.
நாட்டுப்பற்று அதிகம் உடையவன் நான். 15 முறை ரத்ததானம் செய்து உள்ளேன். என்னை தீவிரவாதி என்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் தனிமை சிறையில் அடைத்துள்ளனர். இதனால் எனக்கு மனம் வருத்தமாக உள்ளது.
இவ்வாறு ஹீரா கூறினார்.
அப்துல் கபூர்
நெல்லை கோர்ட்டுக்கு வந்த அப்துல் கபூர் கூறியதாவது:
எனக்கும், தீவிரவாதத்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. சென்னையில் செருப்பு கடையில் நான் வேலை செய்தபோது ஒரே ஊர்க்காரர் என்ற முறையில் ஹீராவுடன் பழகி வந்தேன். காஞ்சீபுரம் மாவட்டம் ஆலந்தூர் கிளையின் ஒரு அமைப்பின் (தவ்ஹீத் ஜமாத்) செயலாளராக பொறுப்பு வகித்து வந்தேன். அப்போது பேட்டை பள்ளிவாசலில் இரு பிரிவுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
நான் என்னுடைய அமைப்பு அல்லாமல் மற்றொரு அமைப்பை (சுன்னத்துல் ஜமாத்) ஆதரித்தேன். இதனால் ஆத்திரம் அடைந்த என்னுடைய அமைப்பினர் என்னை போலீசில் சிக்க வைத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் என்னை போலீசார் கைது செய்தனர். எனக்கு டைம் பாம் செய்ய தெரியாது.
இவ்வாறு அப்துல் கபூர் கூறினார்.
நன்றி : தினத் தந்தி
குண்டுவெடிப்பு சம்பங்களில் காவல்துறை உண்மையான குற்றவாளிகளை இனம் காண வேண்டும்.
கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் 6ம்நாள் மஹாராஷ்டிர மாநிலம் நந்தித் என்ற இடத்தில் வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த பஜ்ரங்தள தீவிரவாதிகள் வெடித்துச் சிதறியதும், அச்சம்பவத்தில் பல பஜ்ரங்தள தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதும் காவல்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்திற்கு சில தினங்கள் முன்பாக தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலும், பஸ் நிலையத்திலும் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி பயங்கரவாதிகள், தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தவும் இந்துக்களை ஒருங்கிணைக்கவும் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி முஸ்லிம்கள் மீது திருப்பி விட்டதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்திற்கு முன்பே பல மாதங்களாக குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
நன்றி : WWW.EASTADIRAI.
ுதந்திர தினத்தையொட்டி இப்படித்தான் முஸ்லிம் களைக் கைது செய்வோம....
| தவ்ஹீத், சுன்னத் ஜமாத் பிரச்னையில்என் கணவரை சிக்க வைத்து விட்டனர்* ஷேக் அப்துல் கபூரின் மனைவி புகார் |
| ஆகஸ்ட் |
திருநெல்வேலி:"தவ்ஹீத் ஜமாத், சுன்னத் ஜமாத் பிரச்னையில் எனது கணவரை சிக்கவைத்து விட்டனர்' என, நெல்லையில் கைதான ஷேக் அப்துல் கபூரின் மனைவி ஜீனத் நஜ்மா தெரிவித்துள்ளார்.குண்டு வைக்க திட்டமிட்டதாக நெல்லையில் கைதான ஷேக் அப்துல் கபூரின் மனைவி ஜீனத் நஜ்மா, நேற்று தமிழக உள்துறைச் செயலருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதே மனுவை, நேற்று நெல்லை கோர்ட்டிலும் வெளியிட்டனர்.
அதில் தெரிவித்திருப்பதாவது:எனது கணவர் கபூர் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஏ.ஆர்., செருப்புக் கடையில் வேலை பார்த்தார். அவர் ஆரம்பத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொறுப்பாளராகவும், பின்னர் தமிழ் மாநில முஸ்லிம் லீக்கில் மாநில அமைப்பாளராகவும் இருந்துள்ளார். 2004ம் ஆண்டு திருச்செந்தூர் லோக்சபா தேர்தலில் தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சில ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.
பின்னர் தவ்ஹீத் ஜமாத்தின் பரங்கிமலை கிளைச் செயலராகச் செயல்பட்டார். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியுள்ளார். சென்னை ஆலந்தூரில் ஒரு பள்ளி மாணவி பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட போது அந்தச் சிறுமிக்காகப் போராடி நீதி கிடைக்கச் செய்தார். ஜூலை 13ம் தேதி எனது தம்பி திருமணம் காஞ்சிபுரத்தில் நடந்தது. அதன் வரவேற்பு விழா பேட்டையில் நடந்தபோது அதில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் காதர்மைதீன் பங்கேற்றனர்.
பேட்டை மகதூம் பள்ளிவாசலில் தவ்ஹீத் ஜமாத் மற்றும் சுன்னத் ஜமாத் ஆகியோருக்கு இடையே யார் நிர்வாகத்தை நடத்துவது என்பது தொடர்பாக மோதல் நடந்தது. இதில் என் கணவர் தவ்ஹீத்தில் இருந்தாலும் சுன்னத் ஜமாத்திற்கு ஆதரவாகப் பேசியுள்ளார். ஜூலை 27ம் தேதி சீருடை அணியாத போலீசார் வந்து எனது கணவரை அழைத்துச் சென்றனர். மறுநாள் காலையில் எனது கணவர் கைதானது குறித்து நாளிதழ்களைப் பார்த்து அதிர்ந்து போனேன்.
எனது கணவர் மீது எந்த வழக்கும் கிடையாது. உள்ளூர் ஜமாத் பிரச்னையால் உளவுத் துறையினர் திட்டமிட்டு எனது கணவர் மீது பொய்வழக்குப் போட்டுள்ளனர்.மறுநாள் சிறையில் அவரிடம் பேசியபோது, "சுதந்திர தினத்தையொட்டி இப்படித்தான் முஸ்லிம் களைக் கைது செய்வோம் என்றும் இதன் மூலம் உள்ளூர் பாதுகாப்பை அதிகப்படுத்து வோம் எனவும், மீறினால் உன் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைப் போம்' எனவும் போலீசார் கூறியதாகச் சொன்னார். இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ., க்கு மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Thursday, June 26, 2008
Thursday, June 19, 2008
திருவிழாவின் பெயரால் அப்பாவி இந்துக்களை மோசடி செய்யும் தந்திரம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 நாள் நடக்கும் மஹாபாரத திருவிழாக்களில் கட்டைகள் உருட்டி விளையாடும் சூதாட்டத்தில் அப்பாவிகள் பணத்தை பறிகொடுக்கும் அவலம் நடந்து வருகிறது. மலைகள் சூழ்ந்த கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பல வரலாற்று சிறப்புகள் உள்ளது. மாவட்டத்தில் 70 சதவீதம் பேர் கிராமத்தில் வாழ்கின்றனர். கிராமத்தில் உள்ளவர்கள் பழமை மாறாமல் இன்றளவிலும் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாரியம்மன், காளியம்மன், பத்திரகாளியம்மன் ஆகிய திருவிழாக்கள் கிராமங்கள் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்வர். மஹாபாரத கதைகளை கூறி 15 நாட்கள் கிராமங்களில் திருவிழா களைகட்டும். பொதுவாக மே இறுதி வாரத்திலும், ஜூன் முதல் வாரத்தில் இத்திருவிழா மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் நடக்கும். மஹாபாரத திருவிழா நடக்கும் இடங்களில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சூதாட்ட ஏஜென்ட்கள் ஊர் பெரியர்வர்களை அணுகி கட்டைகளை வைத்து சூதாட்டம் நடத்த பெரிய தொகையை அன்பளிப்பாக கொடுத்து விடுகிறார்கள். இவ்வாறு பெறப்படும் தொகையை கொண்டுதான் பல கிராமங்களில் விழாவை வெகு விமரிசையாக நடத்துகிறார்கள். சூதாட்டகாரர்கள் கொடுக்கும் பணத்தில் உள்ளூர் வருவாய் துறையை சேர்ந்தவர்களில் இருந்து போலீஸார் வரை ஊர் பெரியவர்கள் மாமூல் கொடுத்து விடுகின்றனர். இதனால் சூதாட்டம் நடக்கும் இடத்தில் எந்தவித தகராறு நடந்தாலும் போலீஸார் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். கட்டைகளை உருட்டி நடக்கும் சூதாட்டத்தில் ஒரு இரவில் மட்டும் பலர் ஆயிரக்கணக்கில் பணத்தை இழப்பது உண்டு. இழந்த பணத்தை மீட்பதற்காக சூதாட்டத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள் இரு சக்கர வாகனங்கள் முதல், டிராக்டர் வரை பந்தய பொருளாக வைத்து சூதாடும் கொடுமையும் நடந்து வருகிறது. சூதாட்டத்தில் வெற்றி பெற்று பணத்தை பெற்றுகொண்டு வீட்டுக்கு செல்ல நினைப்பவர்களை சூதாட்டம் நடத்தும் கும்பல் மிரட்டி பணத்தை பறித்து கொள்வார்கள். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீஸாரிடமும், திருவிழாவை நடத்துபவர்களிடம் புகார் கூறினாலும் அவர்கள் அதை பற்றி கண்டு கொள்வதில்லை. பொதுவாக மஹாபாரத கதையில் பகலில் 18 நாள் சொற்பொழிவு நடக்கும். சூதாட்ட காரர்கள் போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை என்றால், திருவிழா நடத்துவோர்களிடம் கூறி மேலும் சில நாள் திருவிழாவை நடத்துவதும் உண்டு. கூடுதலாக திருவிழா நடக்கும் நாட்களுக்கு தெருக்கூத்து கலைஞர்களுக்கு தனி தொகையை சூதாட்டகாரர்கள் கொடுத்து விடுவர். குறிப்பிட்ட இடத்தில் மஹாபாரத திருவிழா நடக்கிறது என்றால் திருவிழாவை நடத்தும் ஊர்காரர்கள் கூட திருவிழாவை விளம்பரப்படுத்த மாட்டார்கள். மாறாக சூதாட்டக்காரர்கள் காரில் சென்று திருவிழா நடத்துவதை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இரவில் சூதாட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு வசதியாக வாகன வசதிகளையும் சூதாட்டகாரர்கள் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு மாவட்டத்தில் இதுவரை நடந்த மஹாபாரத திருவிழாவில் மட்டும் பொதுமக்கள் பல லட்ச ரூபாய் இழந்துள்ளார்கள். இதற்காக நிலத்தை பலர் விற்று பணத்தை இழந்திருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மஹாபாரத திருவிழா நடக்கும் கிராமங்களில் போலீஸார் ரோந்து சென்று கட்டை சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நன்றி : தினமலர்
Wednesday, June 18, 2008
ராக்கெட் லாஞ்சர் குண்டுகள பின்னணி என்ன ?
தூத்துக்குடி : துபாயிலிருந்து தூத்துக்குடி தனியார் கம்பெனிக்கு வந்த கண்டெய்னருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரை டன் துப்பாக்கி தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோட்டில் ராஜாத்தி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கம்பெனி உள்ளது. அதன் உரிமையாளராக முருகேசன், மேனேஜராக அதிசய குமார் ஆகியோர் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் துபாயிலிருந்து கப்பல் மூலம் அக்கம்பெனிக்கு கண்டெய்னர் ஒன்று வந்தது. நேற்று கம்பெனிக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த கண்டெய்னர் திறந்து பார்க்கப்பட்டது. அதனடியில் மொத்தம் அரை டன் எடை கொண்ட ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதுப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை தாளமுத்து நகர் போலீசார் பறிமுதல் செய்தனர். அதுகுறித்து டி.எஸ்.பி.,க்கள் முகமது கோரி, நடராஜ மூர்த்தி மற்றும் கியூபிரிவு, உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். சுங்க இலாகா அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கும்மிடிப்பூண்டி தனியார் கம்பெனியில் ராக்கெட் லாஞ்சர்கள் சிக்கின. அது போல தூத்துக்குடி கம்பெனிக்கு வந்த கண்டெய்னரிலும் ராக்கெட் லாஞ்சர்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர்களுக்கு ஒரு கேள்வி ?
இன்றைய கால கட்டத்த்ல் அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மீடியாக்கள் சித்தரிக்கப் பட்டு கைது செய்யப்ப் படுவதும் பின்னர் அனைத்து பத்திரிகைகளிலும் அது மாதக் கணக்கில் தலைப்பு செய்திகளாக இடம்பெறுவதும் நாம் அனைவரும் அறிந்த ஓன்று.இப்படி கைது செய்யப் படும் போலி தீவிர வாதிகள் பின்னர் எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் என்று விடுதலை ஆவது இன்று நம்மில் பலரும் அறிந்திராத ஓன்று.நிலைமை இப்படி இருக்க இன்று ஆயிரக் கணக்கில் டெட்டனேட்டர்கள் பிடிபடுவதும் ஒரு ஆயுதக் கிடங்கு என்று சொல்லும் அளவுக்கு துப்பாக்கி குடுகள் ராக்கெட் லான்செர்கள் போன்ற படுபயங்கரமான ஆயுதங்கள் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பிடிக்கப் படுகிறது. இது எந்த ஒரு முஸ்லிமுக்கும் சொந்தமானது இல்லை என்பதனால் இன்று பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக காண முடியவில்லை.இருந்தாலும் ஒவ்வொரு இந்தியனும் சிந்திக்க வேண்டிய கேள்வி என்னவென்றால் இத்தகைய ஆயுதங்கள் ஏன் எதற்க்காக பதுக்கி வைக்கப் பட்டிருக்கிறது, இதன் உண்மை பின்னணி என்ன எனபது பற்றி தான்.நீங்கள் ஒரு உண்மை இந்தியன் என்றால் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேளுங்கள் விடை தேட முயலுங்கள்.நம் தாய் நாட்டை காப்பாற்றுங்கள்
காவிகளின் காதல் வலையில் வாழ்கையை தொலைக்கும் இஸ்லாமிய பெண்கள்
இதுபற்றி ரெங்கராஜிடம் ஜாஸ்மின் கூறினார். ""கோவிலில் திருமணம் செய்துகொள்ளலாம் புறப்பட்டுவா,'' என தெரிவித்ததும். ஜாஸ்மின் திருச்சி வந்தார். இருவரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டு ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்தனர். காதல் ஜோடிகளின் பெற்றோர்களிடம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். காதல் ஜோடிகள் மிகவும் மிகழ்ச்சியுடன் சென்றனர்
இதற்க்கு முன்னும் இதுபோல பல பெண்கள் காதல் வலையில் விழுந்து தன்னுடைய பெற்றோர்களையும் உறவினர்களையும் மார்க்கத்தையும் மறந்து ஓடிப் போய் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் அவமானங்களை தேடி தந்த வரலாறு நிறைய உண்டு.ஆனால் அத்தகைய பெண்களின் தற்ப்போதைய வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்டவர்களுக்கு தெரியும் இத்தகைய காதல் நாடகங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மை அகோரம்.இனிய சகோதரிகளே இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்.இவர்களின் உண்மை ரூபங்களை அறிந்துக் கொள்ளுங்கள்.



